Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.93,960 வரை மாத சம்பளம்.. எஸ்பிஐ வங்கியில் 800 காலி பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் டெக்னிக்கல் பிரிவில் காலியாக உள்ள 800 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.இ., பிடெக், எம்சிஏ, எம்டெக், எம்எஸ்சி படித்த 25 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் அக்டோபர் 4ம் தேதிக்குள் பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரப்பூரவ் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ரூ.48,480 முதல் ரூ.93,960 வரை மாத சம்பளம் கிடைக்கும்.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) சிறப்பு கேடர் அதிகாரி (SCO) பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு வங்கியான எஸ்பிஐயில் வேலைக்கு சேர வேண்டும் என்பதே, வங்கி வேலையில் சேர விரும்பும் பலரின் கனவாக உள்ளது.

jobs job state bank of india bank jobs sbi jobs

இந்த வங்கிக்கு இந்தியா முழுவதும் ஏராளமான கிளைகள் உள்ளன. பாரத ஸ்டேட் வங்கி கிளைகள் இந்தியாவின் கடைக்கோடி கிராமம் முதல் நாட்டின் தலைநகரான டெல்லி வரை இல்லாத ஏரியாவே இருக்காது.. இதனால் பாரத ஸ்டேட் வங்கியில் வேலை கிடைத்தால் எளிதாக பணியிட மாறுதல் வாங்கி சொந்த ஊர் போக வாய்ப்பு உள்ளது என்பதால், பலரும் விரும்பும் வங்கி வேலையாக உள்ளது.

இந்தநிலையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பல்வேறு பணிகளுக்கான சிறப்பு கேடர் அதிகாரி (SCO) பணிக்கான 800 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி காலிப்பணியிடங்கள் என்பது டெக்னிக்கல் பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் என்பதால், நன்கு படித்த மற்றும் உரிய தகுதி உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

மொத்த பணியிடங்கள்: துணை மேலாளர் (சிஸ்டம்) மற்றும் உதவி மேலாளர் (சிஸ்டம்) ஆகிய இரு உயர் அதிகாரிகள் பணியிடங்கள் மட்டும் 798 இடங்கள் உள்ளன. இதுதவிர, துணைத் தலைவர் (IT Risk) மற்றும் உதவி துணைத் தலைவர் (IT Risk) ஆகிய இரு பிரிவுகளில் தலா ஒரு பணியிடங்கள் என இரண்டு உயர் அதிகாரி பணியிடங்களும் இன்று வெளியிட்ட அறிவிப்பின் மூலம் பாரத ஸ்டேட் வங்கி நிரப்ப உள்ளது..

கல்வி தகுதி: துணை மேலாளர் (சிஸ்டம்) மற்றும் உதவி மேலாளர் (சிஸ்டம்) , துணைத் தலைவர் (IT Risk) உதவி துணைத் தலைவர் (IT Risk), ஆகிய பதவிகளுக்கு கல்வித்தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் பி.இ, பி.டெக், எம்சிஏ, எம்.டெக் அல்லது எம்.எஸ்.சி ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும். மேலும், விண்ணப்பிக்கும் பணியைப் பொறுத்து 2-5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பதும் அவசியம் ஆகும். பணி அனுபவம் இல்லாதவர்ளுக்கு வாய்ப்பு கிடைக்காது.

வயது வரம்பு என்ன: துணை மேலாளர் (சிஸ்டம்), துணைத் தலைவர் (IT Risk) உதவி துணைத் தலைவர் (IT Risk), ஆகிய பணிகளுக்கான வயது வரம்பு 25 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். உதவி மேலாளர் (சிஸ்டம்) பணிக்கு மட்டும் வயது வரம்பு 21 - 30க்குள் இருக்க வேண்டும். உதவி மேலாளர் பதவிக்கு மட்டும் எழுத்து தேர்வும், துணை மேலாளர் பதவிக்கு நேர்முகத் தேர்வு மூலமாகவும் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.

சம்பளம் எவ்வளவு: துணை மேலாளர் பணியிடங்களுக்கு ஊதியமாக ரூ.64,820 - ரூ.93,960 வரை மாதம் கிடைக்கும். அதேநேரம், உதவி மேலாளர் பணியிடங்களுக்கு ஊதியமாக ரூ.48,480 - ரூ.85,920 வரை மாதம் கிடைக்கும் என எஸ்பிஐ வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை மேலாளர் (சிஸ்டம்) மற்றும் உதவி மேலாளர் (சிஸ்டம்) , துணைத் தலைவர் (IT Risk) உதவி துணைத் தலைவர் (IT Risk), ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அக்டோபர் மாதம் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

எப்படி விண்ணப்பிப்பது: இந்த பணிக்கு விண்ணப்பிக்க பொது, ஒபிசி மற்றும் EWS பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.750 விண்ணப்பக் கட்டணம் ஆகும். எஸ்.சி, எஸ்.டி மற்றும் PwBD பிரிவினருக்கு இந்த கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://sbi.co.in/web/careers என்ற அதிகாரப்பூர்வ SBI இணையதளத்தைப் பார்வையிடவும். அடுத்ததாக "Current Openings" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகள் (SCO) ஆட்சேர்ப்புக்கான விளம்பரத்தைக் கண்டறிந்து, "ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்" என்பதைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கலாம் என்று எஸ்பிஐ நிறுவனம் அறிவித்துள்ளது. முழுப விவரங்களை https://sbi.co.in/web/careers தளத்தில் அறியலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+