வருமான வரி ITRஐ.. ஆன்லைன் மூலம் தாக்கல் செய்வது எப்படி? எளிமையான படிகள்! இதை நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரி ITR பக்கத்தின் E Filing திறக்கப்பட்டு உள்ளது. பார்ம் 1 மற்றும் 4க்கான பக்கங்கள் திறக்கப்பட்டு உள்ளன. அதாவது சம்பளதாரர்கள், HUFகள், மற்றும் பார்ட்னர்ஷிப் நிறுவனங்கள் இதன் மூலம் வருமான வரி தாக்கலை மேற்கொள்ள முடியும். இன்றில் இருந்து வருமான வரி ITR இதனால் தாக்கல் செய்ய முடியும். இதில் வருமான வரிக் கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்வது எப்படி என்பது குறித்துப் பார்ப்போம்.

வருமான வரி இணையதளத்தில் ITR ஐ ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான வழிமுறைகள்
வருமான வரிக் கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்ய, வருமான வரி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

படி 1:

முதலில் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று உள்நுழைய வேண்டும். அதில் உங்களுடைய பான் எண்ணை (PAN) பயனர் ஐடியாக உள்ளீடு செய்து, கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.

படி 2:

'File Income Tax Return' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 'e-File' பகுதிக்குச் சென்று, 'Income Tax Returns' என்பதைத் தேர்ந்தெடுத்து, 'File Income Tax Return' என்பதைக் கிளிக் செய்யவும்.

Step by Step guide of Filing income tax returns ITR through online

படி 3: சரியான மதிப்பீட்டு ஆண்டைத் (Assessment Year) தேர்ந்தெடுக்கவும்:

நீங்கள் 2024-25 நிதியாண்டுக்கு வருமான வரி தாக்கல் செய்தால், மதிப்பீட்டு ஆண்டாக 'AY 2025-26' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 'Online' மூலம் தாக்கல் செய்வதைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தாக்கல் செய்வது அசல் வருமானமா அல்லது திருத்தப்பட்ட வருமானமா என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 4: தகுந்த நிலையைத் (Status) தேர்ந்தெடுக்கவும்:

உங்களுக்குப் பொருந்தக்கூடிய filing status-ஐத் தேர்ந்தெடுக்கவும்: தனிநபர், HUF (இந்து கூட்டுக் குடும்பம்) அல்லது மற்றவை. பெரும்பாலானோர் 'தனிநபர்' என்பதைத் தேர்ந்தெடுத்து 'Continue' கொடுக்கவும்.

படி 5: ITR வகையைத் தேர்ந்தெடுக்கவும்:

உங்களுடைய வருமான ஆதாரங்களின் அடிப்படையில் எந்த ITR படிவம் உங்களுக்குத் தேவை என்பதைத் தீர்மானிக்கவும். ITR 1 முதல் 4 வரை தனிநபர்கள் மற்றும் HUF-களுக்குப் பொருந்தும். மொத்தம் 7 ITR படிவங்கள் உள்ளன.

படி 6: ITR தாக்கல் செய்வதற்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும்:

உங்கள் வருமானத்தைத் தாக்கல் செய்வதற்கான காரணத்தைக் குறிப்பிடவும்: விலக்கு வரம்புக்கு மேலான வரி வருமானம், குறிப்பிட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்தல் போன்றவை.

படி 7: பூர்த்தி செய்யப்பட்ட தனி நபர் தகவல்களைச் சரிபார்க்கவும்:

PAN, ஆதார், பெயர், தொடர்புத் தகவல் மற்றும் வங்கி விவரங்கள் போன்ற பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களைச் சரிபார்க்கவும்.

படி 7 a: பூர்த்தி செய்யப்பட்ட வருமான தகவல்களைச் சரிபார்க்கவும்:

உங்களுடைய வருமானம், விலக்குகள் மற்றும் கழிவு விவரங்களை மதிப்பாய்வு செய்யவும். உங்கள் வருமானம் சரியாக கொடுக்கப்பட்டு உள்ளதா என்று பார்க்கவும். நீங்கள் கட்டிய வரிகள் சரியாக உள்ளதா என்று பார்க்கவும். அதாவது நான்கு காலாண்டிற்கான டிடிஎஸ் கொடுக்கப்பட்டு உள்ளதா என்று பார்க்கவும். கடைசியாக உங்களுடைய முதலீடுகள் சரியாக கொடுக்கப்பட்டு உள்ளதா என்று பார்க்கவும்.

படி 8: ITR ஐ சரிபார்க்கவும்:

கடைசி கட்டமாக, உங்களுடைய ITR குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் (30 நாட்கள்) E Verify செய்து சரிபார்க்க வேண்டும். ஆதார் OTP, EVC, நெட் பேங்க்கிங் போன்ற முறைகளைப் பயன்படுத்தி ஆன்லைனில் சரிபார்க்கலாம். அல்லது ITR-V-யின் அச்சுப் பிரதியை CPC-க்கு அனுப்பலாம்.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, வருமான வரி செலுத்துவோர் தங்களின் வருமான வரிக் கணக்கை எளிதாக ஆன்லைனில் தாக்கல் செய்யலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+