கோவை - மதுரையில் ஐடி வேலைவாய்ப்பு.. 5 பிரிவுகளில் காலியிடங்கள்.. உடனே விண்ணப்பம் செய்யலாம்
கோவை: கோவை, மதுரையில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனத்தில் 5 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் முழுவிபரம் வருமாறு:
மதுரையை தலைமையிடமாக கொண்டு Suman Technologies என்ற சாப்ட்வேர் டெவலப்மென்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதேபோல் கோவையிலும் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் சென்னை மற்றும் கோவையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதில் முதலில் பார்க்கப்போகும் பணியின் பெயர் சீனியர் ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் (Senior Fullstack Developer). இந்த பணிக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் 12 ஆண்டு வரை பணி அனுபவம் என்பது கொண்டிருக்க வேண்டும். அதேபோல் Angular JS, Node JS, VueJS, Next.js, Nest.js, Laravel, React.js, Redux, Typescript, REST Apis உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
2வது பணி என்னவென்றால் சீனியர் மொபைல்ஆப் டெவலப்பர் பணியாகும். இந்த பணிக்கு React Native, Redux, Typescript, REST APIs, FireBase உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் குறிப்பிட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் அதிகபட்சமாக 12 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
3வதாக பார்க்கப்போகும் பணி சீனியர் பைத்தான் டெவலப்பர். இந்த பணிக்கு பைத்தான், DJANGO/FlASK, POSTGRESQL, REST APIS, AWS உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் குறிப்பிட்ட துறையில் குறைந்தபட்சம் 5 முதல் 10 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
4வதாக பார்க்கப்போகும் பணி என்பது சீனியர் சாப்ட்வேர் டெஸ்ட் இன்ஜினியர். இந்த பணிக்கு மேனுவல் மற்றும் ஆட்டோமேஷன் டெஸ்ட்டிங், செலினியம், ஏபிஐ டெஸ்ட்டிங், சிஐ/சிடி ஆகியவை தெரிந்திருப்பதோடு 5 முதல் 7 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். 5வது பணி என்பது சீனியர் பைத்தான் ஏஐ டெவலப்பர் ரோலாகும். இந்த பணிக்கு கம்ப்யூட்டர் விஷன், ஓபன்சிவி, டென்சார்ப்ளோ, Pytorch, Keras, NumPy, Scikit-image, Matplolib, Seaborn, Yolo உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான மாதசம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது. அனைத்து பணிகளும் சீனியர்களுக்கானது என்பதால் பணி அனுபவத்தின் அடிப்படையில் நல்ல சம்பளம் என்பது வழங்கப்படும் வாய்ப்புள்ளது.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் 2 இடங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளன. அதன்படி கோவை, மதுரையில் நியமனம் செய்ப்பட உள்ளனர். பணிக்கான அறிவிப்பு என்பது நேற்று முன்தினம் வெளியானது. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எது என்று தெரிவிக்கப்படவில்லை. எனவே எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் [email protected] வழியாக விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here












Click it and Unblock the Notifications