சென்னை மாநகராட்சியில் மொத்தம் 150 காலிபணியிடங்கள்.. நல்ல சம்பளம்.. வெளியான மேஜர் அறிவிப்பு
சென்னை: தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற சுகாதார நிலையங்களில் மருத்துவ அதிகாரி, ஸ்டாஃப் நர்ஸ், பல்நோக்கு சுகாதார பணியாளர், சுகாதார இன்ஸ்பெக்டர், ஆலோசகர், சமூக சேவகர், உளவியலாளர் உள்பட பல்வேறு காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 150 காலிபணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை மாநகராட்சி நகர நகர்ப்புற சுகாதார இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் ஆரோக்கிய நல மையங்களில் பின்வரும் ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளார்கள். கீழ்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1. மருத்துவ அதிகாரி,
மொத்த இடங்கள்: 30
மாத ஊதியம்: ரூ.60,000
வயது வரம்பு: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
2. ஸ்டாஃப் நர்ஸ்
மொத்த இடங்கள்: 32
மாத ஊதியம்: ரூ. 18,000
வயது வரம்பு: 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
3. MPHW(பல்நோக்கு சுகாதார பணியாளர்)/சுகாதார இன்ஸ்பெக்டர் - தரம் II கிரேடு 2 (ஆண்கள்)
மொத்த இடங்கள்: 32
மாத ஊதியம்: ரூ.14,000
வயது வரம்பு: 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
4. உதவி பணியாளர்
மொத்த இடங்கள்: 66
மாத ஊதியம்: ரூ.8500
வயது வரம்பு: 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
5. ஆலோசகர்/உளவியலாளர்
மொத்த இடங்கள்: 5
மாத ஊதியம்: ரூ.23,000
வயது வரம்பு: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
6.மனநல நிபுணர்கள்
மொத்த இடங்கள்: 5
மாத ஊதியம்: ரூ.23,000
வயது வரம்பு: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பப் படிவம் மற்றும் ஆட்சேர்ப்பு விவரங்களை www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களுடன் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் அனுப்ப வேண்டிய முகவரி: உறுப்பினர் செயலாளர், சென்னை நகர நகர்ப்புற சுகாதார பணி, பொது சுகாதாரத் துறை, ரிப்பன் கட்டிடங்கள், சென்னை - 600003
விண்ணப்பங்கள் 06.09.2024 அன்று அல்லது அதற்கு முன் மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டும் . அதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
இது தொடர்பான விளக்கங்களை அறியவும் மேலும் விவரங்களை அறியவும் சென்னை மாநகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். உறுப்பினர் செயலாளர், சென்னை நகர நகர்ப்புற சுகாதார பணி, பொது சுகாதாரத் துறை, ரிப்பன் பில்டிங்ஸ், சென்னை - 600003 தொலைபேசி: 044 - 2561 9330, 044 - 2561 9209 என்ற எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications