"வீட்டில் இருந்தே வேலை".. டிகிரி போதும்.. அனுபவம் தேவையில்லை! பிரபல நிறுவனம் தரும் சூப்பர் சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐடி சார்ந்த சேவை துறையில் செயல்பட்டு வரும் சதர்லேண்ட் (Sutherland) நிறுவனத்தில் இருந்து வீட்டில் இருந்து வேலை செய்வதற்கான ஆட்களை தேர்வு செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.

சதர்லேண்ட்.. ஐடி துறையில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. ஏஐ, ஆட்டோமேஷன், கிளவுட் இன்ஜினியரிங் உள்பட பல்வேறு பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை கொண்டு வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் முறையிலான சேவையை வழங்கும் பணியை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

it jobs jobs job

இந்த சதர்லேண்ட் நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் முக்கிய விவரங்கள் வருமாறு: சதர்லேண்ட் நிறுவனத்தில் இருந்து அசோசியேட் - கஸ்டமர் சர்வீஸ் (Associate - Customer Service) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். பைனான்ஸ் மற்றும் அக்கவுண்ட்டிங் சார்ந்த பிரிவில் படிப்பை முடித்திருப்போருக்கு முன்னுரிமை என்பது வழங்கப்படும்.அதோடு AR Collections பிரிவில் 0-7 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதன்மூலம் அனுபவம் இல்லாதவர்கள் கூட விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்பம் செய்வோருக்கு Accounts receivables Process பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். இ-மெயில், போன்கால் மூலம் கஸ்டமர்களை பாலோ-அப் செய்ய வேண்டும். பில்லிங், பைனான்ஸ், லீகல், டேக்ஸ், கஸ்டமர் சர்வீஸ் தொடர்பான கஸ்டமர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

அக்கவுண்ட் ரிசிவபில் ரெக்கார்ட்டை பின்பற்ற வேண்டும். தினசரி Aging Report தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும். நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். அதேபோல் இன்டர்நேஷனல் வாய்ஸ் அனுபவம் அல்லது இன்டர்நேஷனல் கலெக்சன் அனுபவம் என்பது பிரசர்ஸ்களுக்கு இருக்க வேண்டும். UK ஷிப்ட்டில் பணியாற்ற தயாராக வேண்டும். அதேபோல் பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னைக்கு இடம்பெயர வேண்டி இருக்கும். இருப்பினும் பணி என்பது வீட்டில் இருந்து தான் இருக்கும்.

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான சம்பளம் குறித்த விபரம் இறுதிக்கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அதேபோல் பணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பில் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவென்று தெரிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+