கைநிறைய சம்பளம்.. பிரபல ஐடி நிறுவனத்தில் தரும் சூப்பர் வாய்ப்பு.. இந்த வேலையை மிஸ் பண்ணாதீங்க
சென்னை: பெங்களூரில் செயல்பட்டு வரும் பிரபல ஐடி நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்துடன் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
தற்போது பலரும் ஐடி வேலையை விரும்பி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பல்வேறு நிறுவனங்களில் ஏராளமான வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

இந்நிலையில் தான் Synopsys நிறுவனம் சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. பெங்களூரில் இயங்கி வரும் இந்த நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பின் முக்கிய விபரம் வருமாறு:
Synopsys நிறுவனத்தில் தற்போது சாப்ட்வேர் டெவலப்மென்ட், அசோசியேட் (Software Development, Associate) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். என்ஜினியரிங் முடித்தவர்கள், கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது அதற்கு தொடர்புடைய துறையில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 1 முதல் 2 ஆண்டு வரை டேட்டா இன்டகிரேன் (Dell Boomi, SAP, CPI, Mulesoft etc), டேட்டா குவாலிட்டி (Data Quality), டேட்டா ஆர்க்கிடெக்சர் (Data Architecture), மாஸ்டர் டேட்டா மேனேஜ்மென்ட் ப்ராஜெக்ட் உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் REST, SOAP, JSON, XML, HTTP உள்ளிட்டவற்றை புரிந்து வைத்திருக்க வேண்டும். ERP systems, SAP, successFactors, Ariba, Fieldglass, Salesforce Saasproducts உள்ளிட்டவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதுதவிர Jira, Agile உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதோடு நல்ல கம்யூனிகேஷன் திறமை வைத்திருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு மொத்தம் எத்தனை பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது பற்றிய விபரம் தெரிவிக்கப்படவில்லை. மேலம் சம்பளம் குறித்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.11 லட்சம் வரை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Synopsis நிறுவனத்தின் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
விண்ணப்பத்துக்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை என்பதால் பணியை விரும்புவோர் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது சிறந்ததாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் பணியமர்த்தப்படுவார்கள்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications