நோ எக்ஸாம்.. மாதம் ரூ.37,000 வரை சம்பளம்.. கோவை, திருவண்ணாமலையிலேயே நல்ல வேலை!
கோவை: கோவை மற்றும் திருவண்ணாமலையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.18,000 முதல் ரூ.37,000 சம்பளத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கோவையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதன் உறுப்பு கல்லூரிகள் மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, தேனி மாவட்டம், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் சீனியர் ரீசர்ஜ் பெல்லோ, ஜுனியர் ரீசர்ஜ் பெல்லோ, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் ஆகிய பணிகளுக்கு தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோர் கோவை, திருவண்ணாமலையில் பணியமர்த்தப்படுவார்கள்.
கல்வி தகுதி: சீனியர் ரிசர்ச் பெல்லோ பணிக்கு எம்டெக் பிரிவில் சாயில் அன்ட் வாட்டர் கன்சர்வேஷன் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஜுனியர் ரிசர்ச் பெல்லோ பணிக்கு பிஎஸ்சியில் அக்ரிகல்சர், ஹார்ட்டிகல்சர் படிப்பையும், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு டிப்ளமோ அக்ரிகல்சர் படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: சீனியர் ரிசர்ச் பெல்லோ பணிக்கு மாதம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.37 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். ஜுனியர் ரிசர்ச் பெல்லோ பணிக்கு மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு மாதம் ரூ.18 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உரிய கல்வி சான்றிதழ்களுடன் நேர்க்காணலில் பங்கேற்கலாம். டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கான நேர்க்காணல் The Dean AC & RI, Vazhavachanur, Tiruvannamalai என்ற முகவரியில் டிசம்பர் 11ம் தேதி நடைபெற உள்ளது. சீனியர் மற்றும் ஜுனிர் ரிசர்ச் பெல்லோ பணிக்கான நேர்க்காணல் என்பது The Dean AAEC & RI, Coimbatore என்ற முகவரியில் டிசம்பர் 12ம் தேதி நடைபெற உள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications