நோ எக்ஸாம்.. மாதஊதியம் ரூ.20000 டூ ரூ.60000..சென்னையில் பணி வழங்கும் டிஎன்இஜிஏ..தேதி முடியப்போகுது
தமிழ்நாடு மின்ஆளுமை முகமையில் காலியாக உள்ள 40 வகையான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை: தமிழ்நாடு மின்ஆளுமை முகமையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு எக்ஸாம் இல்லாத நிலையில் நேர்க்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வேலைக்கு தேர்வாகும் நபர்களுக்கு சென்னையில் பணி வழங்குவதோடு மாத சம்பளமாக ரூ.20 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை கிடைக்கும்.
தமிழ்நாடு அரசின் மின்ஆளுமை முகமையில்( tamil Nadu e-Governance Agency) குவிந்திருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

தமிழ்நாடு மின்ஆளுமை முகமையில் டெக்னிக்கல் லீட், ப்ராஜெக்ட் மேனேர், ப்ரோகிராமர், டேட்டா சயின்டிஸ்ட், டீம் லீட், சீனியர் அனலிஸ்ட் உள்பட மொத்தம் 40 பிரிவுகளில் 53 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிகளுக்கு பிஇ, பிடெக், எம்எஸ்சி, எம்இ, எம்டெக் பிரிவுகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஐடி, இசிஇ, எம்சிஏ, உள்ளிட்ட படிப்புகளை முடித்து பணி சார்ந்த அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக மாதம் ரூ.20 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ.60 ஆயிரம் வரையும் சம்பளம் வழங்கப்பட உள்ளது. தேர்வாகும் அனைவருக்கும் சென்னையிலேயே பணி வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இது ஒரு தற்காலிகமான பணியாகும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை உரிய முறையில் [email protected] எனும் முகவரிக்கு மார்ச் 20ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்கள் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எழுத்து தேர்வு என்பது கிடையாது. மேலும் tnsevai.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்வது பற்றி அறிந்து கொள்ளலாம்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications