8ஆம் வகுப்புக்கு ரூ.50,000.. டிகிரி இருந்தா 1 லட்சம் சம்பளம்! தமிழ்நாடு அரசின் சூப்பர் வேலைவாய்ப்பு!
சென்னை: தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் கீழ் இயங்கும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககத்தில், அலுவலக உதவியாளர் மற்றும் தொகுப்பாளர் பணியிடம் நிரப்பப்படவுள்ளன. உதவியாளர் பணியிடத்திற்கு 50 ஆயிரம் வரையிலும், தொகுப்பாளர் பணியிடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு எட்டாம் வகுப்பு, தொகுப்பாளர் பணியிடத்திற்கு தமிழ் முதுகலை பட்டமும் கல்வித் தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, அரசின் செயல்பாடுகள், நலத்திட்டங்கள் உள்ளிட்டவற்றை மக்களுக்கு நேரடியாக செய்திகளாக வெளியிட்டு வருகிறது. மேலும் மக்கள் தொடர்பு துறையின் மூலம் பல்வேறு வகைகளில் விளம்பரம் செய்யப்படுகிறது.
மக்கள் தொடர்பு முகாம்கள், டிஜிட்டல் விளம்பரப் பலகைகள், செய்தித்தாள்களில் விளம்பரம், சமூக வலைதள பதிவுகள் மூலம் தமிழக அரசு திட்டங்கள் மக்களிடம் தொடர்ந்து கொண்டு செல்லப்படுகின்றன.

இந்த துறையில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், புகைப்படக்காரர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களும் உள்ளன. தற்போது தமிழக அரசின் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் கீழ் இயங்கும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககம் செயல்பட்டு வருகிறது.
தற்போது அந்த இயக்கத்தில் இயக்கத்தில் இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வெளியாகி இருக்கும் அறிவிப்பில்" தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின்கீழ் இயங்கும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககத்தில் நிலை 1, ரூ.15,700-50000 (முந்தைய சம்பள ஏற்ற முறை ரூ.4800-ரூ.10,000 + தர ஊதியம் ரூ.1300) எனும் சம்பளத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளருக்கான அனைத்துப் படிகளுடன் கூடிய அலுவலக உதவியாளர் பணியிடம் ஒன்றும்;
நிலை 15. .36200 114800 (முந்தைய சம்பள ஏற்ற முறை ரூ.9300-34800 + தர ஊதியம் ரூ.4500) எனும் சம்பளத்திலமைந்த தொகுப்பாளர் பணியிடம் ஒன்றும் நிரப்பப்படவுள்ளன.
அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்) (SCA-Priority) எனும் இனச் சுழற்சி முறையிலும், தொகுப்பாளர் பணியிடத்திற்கு 'ஆதிதிராவிடர் முன்னுரிமைப் பெற்றவர்' (Scheduled Caste Priority) எனும் இனச் சுழற்சி முறையிலும் தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதிகபட்ச வயது வரம்பு 01.07.2025 அன்றுள்ளபடி 37. தமிழக அரசின் நடைமுறையிலுள்ள விதிமுறைகளின்படி வயது வரம்பு தளர்வு செய்யப்படும்.
அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி (Vill Std. Passed) தொகுப்பாளர் பணியிடத்திற்கான கல்வித் தகுதி தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் (தமிழில் எம்.ஏ.). அதிகபட்ச வயது வரம்பு 01.07.2025 அன்றுள்ளபடி 37. தமிழக அரசின் நடைமுறையிலுள்ள விதிமுறைகளின்படி வயது வரம்பு தளர்வு செய்யப்படும். விருப்பமும் தகுதியும் உடையவர்கள் வெள்ளைத்தாளில் கடவுச்சீட்டு அளவிலான ஒளிப்படத்தினை ஒட்டி தன்விவரக் குறிப்புடன் பெயர், முகவரி, பிறந்தநாள், மதம், இனம், கல்வித் தகுதி, முன்னுரிமை கோருவதற்கான சான்று ஆகியவற்றுடன் தேவையான சான்றிதழ்களின் ஒளிப்படிகளைத் தற்சான்றொப்பத்துடன் (Self Attested) இணைத்து 16.08.2025ஆம் நாள் மாலை 5.30 மணிக்குள் நேரிலோ, பதிவு அஞ்சலிலோ, "இயக்குநர் (முகூபொ), செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகர் நிருவாக அலுவலக வளாகம், முதல் தளம், எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகர், சென்னை 600 028" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-29520509 என்னும் தொலைபேசி எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications