தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை.. டிகிரி முடிச்சிருக்கீங்களா? செம சான்ஸ்! அப்ளை பண்ணுங்க
சென்னை: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. கடந்த 27 ஆம் தேதி முதல் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்கவும். இதற்கான தகுதிகள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தின் தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் வங்கி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கிளைகளுடன் இந்த வங்கி இயங்கி வருகிறது. மெர்க்கன்டைல் வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது காலியாக உள்ள வேளாண்மை அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்ற விவரங்களை பார்க்கலாம்.

கல்வித் தகுதி: வேளாண்மை அதிகாரி பணியிடத்திற்கு வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்பு / கால்நடை அறிவியல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்று இருக்க வேண்டும். கூடுதலாக வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணி புரிந்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும். தேர்வு முறையை பொறுத்தவரை தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வு நேரடியாகவோ அல்லது வீடியோ கான்பரன்சிங் வாயிலாகவோ நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தேவையான கல்வி தகுதி மற்றும் அனுபவம் இருப்பவர்கள் http://www.tmbnet.in/tmb_careers/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு தொடங்கிய நாள்: 27.01.2025 ஆகும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.02.2025 ஆகும்.
பிற விவரம்: தேர்வு செய்யபடும் விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியில் அமர்த்தப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் பணியாளர்கள், நவீன வேளாண்மையை கடைபிடிக்க வலியுறுத்துவதோடு, ஊக்குவிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு உள்ள சலுகைள், நிதி உதவி, கடன் திட்டங்கள் பற்றி எடுத்து விளக்க வேண்டியிருக்கும். கிசான் கிரெடிட் கார்டுகள், பயிர்க் கடன்கள் பெற தொகுதியான விவசாயிகளை மதிப்பிட வேண்டும். அரசின் திட்டங்கள், நபார்டு வழிமுறைகள் உள்ளிட்டற்றை நன்கு தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_AGL20242501.pdf
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications