நல்ல சம்பளம்.. டிகிரியே போதும்.. திருச்சி சட்ட பல்கலையில் வார்டன் பணி.. பெண்களும் விண்ணப்பிக்கலாம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகம் செயல்பட்டு வரும் நிலையில் மாணவ-மாணவிகளின் விடுதிகளுக்கான வார்டன் பணிகளை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு தங்கும் வசதியுடன் மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட உள்ளது.

திருச்சியில் தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர், மாணவிகளுக்கு என்று தனித்தனியாக விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் காலியாக உள்ள வார்டன் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tamil Nadu National Law University hostel wardens recruitment

அதன்படி வார்டன் பணிக்கு ஆண், பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏதேனும் ஒரு டிகிரி படிப்பை 60 சதவீத மதிப்பெண்ணுடன் முடித்தவர்கள் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். மேலும் விண்ணப்பம் செய்வோர் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் இவர்கள் கல்லூரி, பல்கலைக்கழகம், நிறுவனங்களில் ஹாஸ்டல்களில் வார்டன் அல்லது சூப்பிரண்டு பணியில் 3 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம், தமிழ் நன்கு அறிந்திருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். மேலும் விடுதியில் தனி அறை வழங்கப்படும். வார்டன் கண்டிப்பாக விடுதியில் தான் தங்க வேண்டும். இவ்வாறு பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் தகுதியின் அடிப்படையில் 6 மாதகாலம் ஒப்பந்தம் அடிப்படையில் வேலைக்கு நியமனம் செய்யப்படுவார்கள்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்க பூர்த்தி செய்து ஏப்ரல் 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை The Registrar, Tamil Nadu National Law University, Navalurkuttappattu, Dindigul Main Road, tiruchirappalli - 620 027 எனும் முகவரிக்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஏப்ரல் 30ம் தேதிக்குள் ரிஜிஸ்டர் தபால், ஸ்பீட் போஸ்ட் அல்லது கூரியர் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். இந்த விண்ணப்ப கவரின் மீது Application for Hostel Warden (Resident) என குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+