Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.26,000 முதல் ரூ.1.10 லட்சம் சம்பளம்.. நெய்வேலி என்எல்சி சூப்பர் வேலை.. விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு!

தமிழ்நாடு நெய்வேலியில் உள்ள எல்என்சி உள்பட 3 இடங்களுக்கு தேவையான ஏராளமான பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறையின் கட்டுப்பாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மைனிங் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலி என்எல்சி உள்பட 3 நிறுவனங்களில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் தற்போது தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.26 ஆயிரமும், அதிகபட்சமாக மாதம் ரூ.1.10 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் ‛நவ்ரத்னா' நிறுவனத்தின் கீழ் இந்தியாவின் பல்வேறு இடங்களில் நிலக்கரி மற்றும் சுரங்க நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சியும் ஒன்றாகும்.

இதேபோல் ராஜஸ்தான் மாநிலம் பார்சிங்சார் மைன்ஸ், ஒடிசாவில் தாலாபிரா மைன்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 3 நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

 காலியிடங்கள் எவ்வளவு?

காலியிடங்கள் எவ்வளவு?

இந்த 3 நிறுவனங்களில் Junior Overman (Trainee), junior Surveyor (Trainee), Sirdar (Selection Grade - I)ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. Junior Overman பிரிவில் மொத்தம் 51 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் தமிழ்நாடு நெய்வேலி மைன்ஸ் நிறுவனத்தில் 46 பேர், ராஜஸ்தான் நிறுவனத்தில் 3, ஒடிசா நிறுவனத்தி்ல 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். Junior Surveyor பிரிவில் மொத்தம் 15 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி நெய்வேலி நிறுவனத்தில் 13 பேர், ராஜஸ்தான், ஒடிசா நிறுவனத்தில் தலா ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். Sirdar பணிக்கு நெய்வேலி நிறுவனத்துக்கு 133 பேர், ராஜஸ்தான் நிறுவனத்தில் 14 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 வயது வரம்பு என்ன?

வயது வரம்பு என்ன?

அனைத்து பணிகளுக்கும் குறைந்தபட்ச வயது 18 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்ச வயது 30 ஆக உள்ளது. ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், பிடபிள்யூடி (பொது) பிரிவினருக்கு 10 வயது வரையும், பிடபிள்யூடி (ஓபிசி) பிரிவினருக்கு 13 வயது வரையும், பிடபிள்யூடி (எஸ்சி/எஸ்டி) பிரிவினருக்கு 15 வயது வரையும் வயது தளர்வு உண்டு. வயது 1.11.2022 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

 கல்வி தகுதி என்ன?

கல்வி தகுதி என்ன?

Junior Overman பணிக்கு டிப்ளமோ பிரிவில் Mining Or Mining Engineerng அல்லது அதற்கு தகுதியான படிப்பை படித்திருக்க வேண்டும். Junior Surveyor பணிக்கு டிப்ளமோ பிரிவில் மைனிங், மைனிங் என்ஜினியரிங், மைனிங் சர்வேயிங், சிவில் என்ஜினியர் உள்ளிட்ட படிப்புகளை முடித்திருக்க வேண்டும். Sirdar பணிக்கு டிப்ளமோ அல்லது டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். Mining Sirdar சான்று பெற்றிருக்க வேண்டும்.

 கல்வி தகுதி என்ன?

கல்வி தகுதி என்ன?

Junior Overman பணிக்கு டிப்ளமோ பிரிவில் Mining Or Mining Engineerng அல்லது அதற்கு தகுதியான படிப்படை மடித்திரக்க வேண்டும். Junior Surveyor பணிக்கு டிப்ளமோ பிரிவில் மைனிங், மைனிங் என்ஜினியரிங், மைனிங் சர்வேயிங், சிவில் என்ஜினியர் உள்ளிட்ட படிப்புகளை முடித்திருக்க வேண்டும். Sirdar பணிக்கு டிப்ளமோ அல்லது டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். Mining Sirdar சான்று பெற்றிருக்க வேண்டும்.

 மாத சம்பளம் எவ்வளவு?

மாத சம்பளம் எவ்வளவு?

Junior Overman மற்றும் Junior Surveyor பணிக்கு ரூ.31 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. Sirdar பணிக்கு ரூ.26 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும். அதன்படி Junior Overman, Junior Surveyor பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ஏறக்குறைய ரூ.7.80 லட்சமும், Sirdar பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6.55 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும்.

 விண்ணப்ப தேதி நீட்டிப்பு

விண்ணப்ப தேதி நீட்டிப்பு

Junior Overman மற்றும்Junior Surveyor பணிக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.595 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிக்கு எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி பிரிவினருக்கு ரூ.295 கட்டணமாக உள்ளது. Sirdar பணிக்கு கட்டணமாக ரூ.486 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி பிரிவினருக்கு ரூ.236 கட்டணமாக உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்ய தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 11ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்பவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here

விண்ணப்ப தேதி நீட்டிப்புக்கான அறிவிப்பை காண Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+