தமிழ்நாடு காவல்துறையில் வேலை.. ஒரு லட்சத்துக்கு மேல் சம்பளம்! தகுதிகள் என்ன? யார் விண்ணப்பிக்கலாம்?
சென்னை: தமிழ்நாடு காவல்துறைக்காக வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் திறன் கொண்ட முன்னாள் இராணுவ வீரர்கள் / முன்னாள் துணை இராணுவப்படை வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு காவல்துறை கூறியுள்ளது. பல்வேறு நிலைகளில், மொத்தம் 59 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ள நிலையில், விண்ணப்பிங்களை 31.10.2025 க்கு முன் தபால் மூலம் அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவில் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் தலைமை காவலர் ஆகிய பணியிடங்களுக்கு 20 ஆயிரத்து 600 முதல் 1,19,500 வரை ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியாகியுள்ள அறிவிப்பில்," தமிழ்நாடு காவல்துறையின் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்க பிரிவுகளில் பின்வரும் பதவிகளில் ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் (தேவைப்பட்டால் நீட்டிக்கப்படலாம்) பணிபுரிய முன்னாள் இராணுவ வீரர்கள் / முன்னாள் துணை இராணுவப்படை வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

(i) ஆய்வாளர் (BDDS) - முன்னாள் சுபேதார்/ சுபேதார் மேஜர் - 2 காலியிடங்கள் - ஊதிய அளவு 37,700-1,19,500
(1) உதவி ஆய்வாளர் (BDDS) - முன்னாள் நாயிப் சுபேதார் 14 காலியிடங்கள் - ஊதிய அளவு 36,900-1,16,600
(iii) தலைமை காவலர் (BDDS) - முன்னாள் ஹவில்தார்/ நாயக் - 43 காலியிடங்கள் - ஊதிய அளவு 20,600-65,500
விண்ணப்பதாரர்கள் பின்வரும் அளவுகோல்களைக் கொண்டிருக்க வேண்டும்: வயது 01.07.2025 நாளன்று 50 வயதுக்குக் கீழுள்ளவர்கள், கல்வித் தகுதி குறைந்தபட்சம் எஸ்.எஸ்.எல்.சி அல்லது அதற்கு சமமான தேர்ச்சி, தொழில்நுட்ப தகுதி CME, புனே அல்லது NSG அல்லது BCAS ஆல் நடத்தப்படும். குறைந்தபட்சம், 6 வார BDD படிப்பில் தகுதி பெற்றிருக்க வேண்டும், அனுபவம் இராணுவம் அல்லது துணை ராணுவப் படைகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி அனுபவம் மற்றும் இந்திய ராணுவத்தின் 261 அல்லது 262 CED பிரிவு அல்லது CME இன் EDD பிரிவு அல்லது NSG இன் BD பிரிவு அல்லது தேசிய வெடிகுண்டு தரவு மையம்-NBDC அல்லது விமான நிலையங்களின் BD பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் நல்ல திறன் மற்றும் நடைமுறை அனுபவம் மற்றும் களப் பொறியியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில், தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் BDD-யை பற்றி பயிற்சி அளிக்கும் திறன் மற்றும் மருத்துவ தகுதி - SHAPE-I.
தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை சுயவிவரங்கள் (Bio data) மற்றும் கல்விச் சான்றிதழ்கள், டிஸ்சார்ஜ் புத்தகத்தின் தேவையான பக்கங்கள். ஓய்வூதிய ஆணை, BDD தொடர்பான படிப்பு/அனுபவச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் நகல்களுடன் கூடுதல் காவல்துறை இயக்குநர். செயலாக்கம். மருதம். எண்.17. போட் கிளப் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை 600 028 என்ற முகவரிக்கு 31.10.2025 க்கு முன் தபால் மூலம் அனுப்ப வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே தனிப்பட்ட அழைப்பு கடிதங்கள் மூலம் தேர்வு சோதனைகளுக்கு (சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்து மற்றும் நடைமுறை தேர்வுகள் போன்றவை) அழைக்கப்படுவார்கள். இந்த ஆட்சேர்ப்பு, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது." என கூறப்பட்டுள்ளது.
-
IT Jobs: நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இண்டர்வியூ.. அனுபவம் வேண்டாம்.. அழைக்கும் HCL -
24 மணி நேரமும் விடாம சுத்துவாங்க.. தமிழக பெண்களுக்காக வந்த சிங்கப்பெண் படை.. வாட்ஸ்-அப் நம்பர் வருது -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications