தமிழக போலீஸ் வேலைவாய்ப்பு 2023.. 3,359 காவலர் பணியிடங்கள்.. சம்பளம் முதல் தகுதி வரை.. முழு விவரம்
சென்னை: தமிழ்நாட்டு இளைஞர்களே போலீஸ் வேலையில் சேர விரும்புகிறீர்களா..இதோ உங்களுக்காக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இரண்டாம் நிலை காவலர் பணிக்கு வரும் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு எப்போது என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
போலீஸ் வேலையில் எப்படியாவது சேர வேண்டும்என்று பலரும் ஆசைப்படுவார்கள். போலீஸ் என்பது பலருக்கும் கனவு போல், அந்த காக்கி உடையின் மீது உள்ள ஆசையில் அதற்காக தவம் இருப்பவர்கள் தமிழகத்தில் பலர் இருக்கிறார்கள். காவலராக பணியில் சேர்ந்து அதன்பின்னர் உயர் தேர்வுகள் எழுதி பெரிய உயர் அதிகாரியாகவும் மாற முடியும்.
https://drive.google.com/file/d/1x-RjQPTK5pxdYfHcS3fRWiatpJcQxsUa/view?usp=sharingபணி பாதுகாப்பு மற்றும் சம்பளம் மற்றும் மரியாதை ஆகியவை தான் காவல்துறை பணியின் மீது பலருக்கும் ஈடுபாடு வரக் காரணமாக உள்ளது. தமிழக காவல்துறையில் பணியாற்ற விரும்புவோருக்கான அறிவிப்பு முறைப்படி நேற்று வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறியுள்ளதாவது : "தமிழக காவல் துறையில் 2-ம் நிலை ஆண், பெண் காவலர்களாக பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதேபோல் சிறைத்துறையில் 2-ம் நிலை சிறை காவலர்கள் வேலைக்கும், தீயணைப்புத்துறையில் தீயணைப்பாளர் வேலைக்கும் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காவல் துறையில் 2-ம் நிலை பெண் காவலர்கள் (மாவட்ட-மாநகர ஆயுதப்படை) 780 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

2-ம் நிலை ஆண் காவலர்கள் 1,819 பேர் தேர்வாக உள்ளனர். சிறைத்துறையில் 2-ம் நிலை சிறைக்காவலர் பதவிக்கு 3 பெண்கள் உள்பட 86 பேர் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். தீயணைப்புத்துறையில் தீயணைப்பாளர் வேலைக்கு 674 ஆண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஒட்டுமொத்தமாக தமிழக காவல்துறையில் 3,359 பேர் புதிதாக பல்வேறு பணிகளுக்கு தேர்வாக இருக்கிறார்கள். இதற்கு 'ஆன்லைன்' மூலம் வருகிற ஆகஸ்ட் 18-ந் தேதி முதல் விண்ணபிக்கலாம் . இணையவழி மூலம் விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 17-ந் தேதி ஆகும். இதற்கான எழுத்து தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். தமிழக காவல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான மோசடி லிங்கில் விண்ணப்பித்துவிடாதீர்கள்.
இந்த தேர்வில் கலந்துகொள்வதற்கு குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயதாகவும், அதிகபட்சம் 26 வயதாகவும் இருக்க வேண்டும். (வயது உச்ச வரம்புகள் ஒவ்வொரு (பிசி, எம்பிசி, எஸ்சி மற்றும் எஸ்சி பிரிவுகளுக்கு தகுந்தபடி மாறுபடும்)" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு மற்றும் பாடத்திட்டம் பிடிஎப் ஆக இணைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியில் பாருங்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications