தமிழக அரசு வேலை.. மாதம் 71 ஆயிரம் சம்பளம்.. தேர்வு இல்லை.. நேரடி நியமனம்! விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: தமிழக துணிநூல் துறையில், காலியாக உள்ள அலுவலக உதவியாளர், டிரைவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தமிழக துணிநூல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் தேவை என்று பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
அலுவலக உதவியாளர் - 07 பணியிடங்கள்
டிரைவர் - 02 பணியிடங்கள்
கல்வி தகுதி: அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். டிரைவர் பணியிடத்திற்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் எல்.எம்.வி மற்றும் ஹெவி டிரைவிங்க் லைசன்ஸ் வைத்து இருப்பது அவசியம். இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயது வரம்பு: இரண்டு பணியிடங்களுக்குமே விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி, எஸ்.டி பிரிவினரை பொறுத்தவரை 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு. அதாவது 37 வயது வரம்பை விண்ணப்பிக்கலாம்.. எம்.பி.சி/டி.சி/பிசி உள்ளிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் 3 ஆண்டுகள் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?:
அலுவலக உதவியாளர்: ரூ.15700 - 58100/-வரை
டிரைவர்: ரூ. 19500 - 71900/-வரை
எப்படி விண்ணப்பிப்பது?: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க போதுமான கல்வி உள்ளிட்ட தகுதிகளும் ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை படித்து அறிந்து கொள்ளவும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தபால் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதார்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு தொடர்பான விவரங்களை அறியை இந்த லிங்கை https://tntextiles.tn.gov.in/ கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
துணிநூல் துறை,
கைத்தறி ஏற்றுமதி அபிவிருத்திக் கழகம்
முதல் மற்றும் இரண்டாம் தளம்,
34, கதீட்ரல் தோட்ட சாலை,
நுங்கம்பாக்கம் - சென்னை-600034
விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள் - 17.07.2024
விண்ணப்பிக்க கடைசி நாள் - 29.07.2024 ஆகும்.
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications