ரூ.40,000 டூ ரூ.1 லட்சம் ஊதியம்! டிகிரி, டிப்ளமோ போதும்!தமிழக சுற்றுலா மேம்பாட்டு வாரியத்தில் வேலை
சென்னை: தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. டிகிரி, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.40 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தில் (Tamil Nadu Tourism Development Corporation அல்லது TTDC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஏஜிஎம்/மேனேஜர் - (Housekeeping), ஏஜிஎம்/மேனேஜர்(Boating and Adventure Tourism), ஏஜிஎம்-Package Tours ஆகிய பணிகளுக்கு தலா ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் மத்திய, மாநில அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ, டிகிரி படித்திருக்க வேண்டும். ஏஜிஎம்/மேனேஜர் - ஹவுஸ்கீப்பிங் பணிக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட், ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன், ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி, ஹோஸ்பிட்டாலிட்டி, டிராவல் மற்றும் டூரிசம் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஏஜிஎம்/மேனேஜர் -போர்டிங் மற்றும் அட்வென்ட்சர் டூரிசம், ஏஜிஎம்-பேக்கேஜ் டூர்ஸ் பணிகளுக்கு டிப்ளமோ/ டிகிரி பிரிவில் டூரிசம் அட்மினிஸ்ட்ரேஷன், டூரிசம் மற்றும் டிராவல் மேனேஜ்மென்ட், ஹோட்டல் மேனேஜ்மென்ட், டிராவல் மற்றும் டூரிசம் படிப்புகளை படித்திருக்க வேண்டும்.
ஏஜிஎம் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.70 ஆயிரம், ரூ.1 லட்சம் வரையும் சம்பளம் வழங்கப்படும். மேனேஜர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையும் மாத ஊதியம் வழங்கப்படும். இது ஒரு தற்காலிக பணியாகும். ஏஜிஎம் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அதிகபட்சமாக 45 வயதுக்குள்ளும், மேனேஜர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அதிகபட்சமாக 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணிக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வு என்பது கிடையாது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ttdc.co.in இணையதளம் சென்று விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து The Managing Director, TTDC Ltd., Tourism Compex, No-2 Wallajah Road, Triplicane, Chennai - 2 என்ற முகவரிக்கு ஏப்ரல் 15க்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் சாப்ட் காப்பியை [email protected] என்ற இமெயிலில் அனுப்பி வைக்க வேண்டும்.
பணிக்கு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications