கைநிறைய சம்பளம்.. 10, 12ம் வகுப்பு டிகிரி, டிப்ளமோ முடித்தவர்களா நீங்கள்? தமிழக அரசில் சூப்பர் வேலை
சென்னை: தமிழ்நாடு நலன் மற்றும் பெண்களுக்கான அதிகாரமளித்தல் துறையில் காலியாக உள்ள 274 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு எழுத்து தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தமிழ்நாடு நலன் மற்றும் பெண்களுக்கான அதிகாரமளித்தல் (Tamil Nadu Welfare and Women Empowerment Department) துறை தனியாக செயல்பட்டு வருகிறது. இந்த துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோரில் மொத்தம் 274 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களில் 8 பேர் SHEW எனும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான மாநில மையத்தில் மற்ற 266 பேரும் DHEW பெண்கள் அதிகாரமளிப்பதற்கான மாவட்ட மையங்களிலும் பணியமர்த்தப்பட உள்ளனர்.
காலியிடங்கள்: தமிழ்நாடு நலன் மற்றும் பெண்களுக்கான அதிகாரமளித்தல் துறையில் மாவட்ட மிஷன் கோ-ஆடினேட்டர், ஜென்டர் ஸ்பெஷலிஸ்ட், பைனான்சியல் லிட்ரசி ஸ்பெஷலிஸ்ட், அக்கவுண்ட் அசிஸ்டென்ட் பணிக்கு ஒருவர், டிஇஓ, மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப், மாநில மிஷன் கோ-ஆடினேட்டர், ரீசர்ஸ் மற்றும் பயிற்சி ஸ்பேஷலிஸ்ட், ஆபிஸ் அசிஸ்டென்ட் என மொத்தம் 274 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி மாவட்ட மிஷன் கோ-ஆடினேட்டர், ஜென்டர் ஸ்பெஷலிஸ்ட், ஸ்டேட் மிஷன் - கோ ஆடினட்டர் பணிக்கு முதுகலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். டிஇஓ, பைனான்சியல் லிட்ரசி ஸ்பெஷலிஸ்ட், ரீசர்ஜ் மற்றும் பயிற்சி ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு டிகிரி,
அக்கவுண்ட் அசிஸ்டென்ட், ஆபிஸ் அசிஸ்டென்ட் பணிக்கு டிகிரி, டிப்ளமோ படித்தவர்களும், மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு 10, 12ம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
வயது வரம்பு: மாவட்ட மிஷன் கோ-ஆடினேட்டர், ஜென்டர் ஸ்பெஷலிஸ்ட், மாநில மிஷன் கோ-ஆடினேட்டர் பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் அதிகபட்சமாக 40 வயதுக்குள்ளும், பிற பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை.
மாதசம்பளம்: ஸ்டேட் கோ-ஆடினேட்டர் பணிக்கு மாதம் ரூ.52 ஆயிரம், மாவட்ட மிஷன் கோ-ஆடினேட்டர் பணிக்கு ரூ.45 ஆயிரம், ஜென்டர் ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம், ரீசர்ஜ் மற்றும் பயிற்சி ஸ்பெஷலிஸ்ட், ஸ்பெஷலிஸ்ட் இன் பைனான்சியல் லிட்ரஸி, டிஇஓ, பணிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம், அக்கவுண்ட் அசிஸ்டென்ட் பணிக்க ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரமும், மல்டி டாஸ்க்கிங் ஸ்பாப் பணிக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரமும் சம்பளமாக வழங்கப்படும்.
கடைசி நாள்: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 26ம் தேதிக்குள் tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியது இல்லை. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications