ZOHO-வில் வேலை! சென்னை, கோவை, நெல்லை, சேலம், மதுரையில் அசத்தலான பணி.. விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்
சென்னை: தமிழ்நாட்டில் இயங்கி வரும் ஜோஹோ நிறுவனத்தில் டெக்னீக்கல் சப்போர்ட் என்ஜினீயர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பிற ஸோஹோ நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ள நிலையில் விண்ணப்பம் செய்ய இன்று கடைசி நாளாகும்.
தமிழ்நாட்டில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் முக்கியமான நிறுவனம் தான் ஜோஹோ. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, நெல்லை, தென்காசி, சேலம், கோவை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்புகளோடு அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஸோகோவில் தற்பாது டெக்னீக்கல் சப்போர்ட் என்ஜினீயர் (Technical Support Engineer) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இந்த பணிக்கு பிஇ, பிடெக் படிப்பை பமுடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். 2024ல் படிப்பை முடிப்பவர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 2 முதல் 6 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் தொலைபேசி மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடு கிளைன்ட் உடன் பேச வேண்டி இருக்கும். மேலும் ஆங்கிலத்தில் நல்ல உரையாடல் திறன் மற்றும் எழுத்து திறனை பெற்றிருக்க வேண்டும். அதோடு தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சனை ஏற்படால் விரைந்து செயல்படும் திறன் கொண்டிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி இரவு பணி பார்க்கும் திறன் கொண்டிருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு தேர்வு செய்யப்படுபவர் சென்னை அலுவலகத்தில் நியமனம் செய்யப்படுவர். தேவை எனில் கோவை, மதுரை, நெல்லை, சேலம் அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய இன்றே (06.03.2024)கடைசி நாளாகும். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இன்றைய தினத்துக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி டெக்னீக்கல் சப்போர்ட் என்ஜினீயர் பணிக்கு மொத்தம் எத்தனை பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. அதேபோல் சம்பளம் குறித்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் ஏராளமானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
பணி தொடர்பான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications