தமிழக சுகாதாரத்துறையில் ரூ.20 ஆயிரத்தில் பணி! காலஅவகாசம் முடியபோகுது! விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பம் செய்ய ஜூன் 20 கடைசிநாளாகும்.
தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் புதிய வேலைவாய்ப்புகள் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன.
மொத்த காலியிடங்கள், விண்ணப்பம் செய்வது எப்படி? என்பது பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:

காலியிடம் எவ்வளவு?
தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் தற்போது Assistant Research Officers மற்றும் Lab Technician பணிகள் என மொத்தம் 20 பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதில் Assistant Research Officers பணிக்கு 11 பேரும், Lab Technicians பணிக்கு 09 பேரும் சேர்க்கப்பட உள்ளன. Assistant Research Officers பணியை பெற விரும்புபவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் M.Sc, B.Pharm, M.Pharm, MBBS, ஆகியவற்றில் ஏதேனும் ஒரு டிகிரியை முடித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Lab Technicians பணிக்கு விண்ணப்பதாரர்கள் DMLT படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு என்ன?
இந்த 2 பணிகளுக்கும் விண்ணப்பம் செய்பவர்களுக்கு வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதும், அதிகபட்சம் 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். வயது சலுகைகளும் உண்டு. அதன்படி BC,BCM, MBC மற்றும் DNC பிரிவினருக்கு 34 வயதும், SC, SCA, ST பிரிவினருக்கு 37 வயதும் வரம்பாக உள்ளது.

ஊதியம் எவ்வளவு?
Assistant Research Officers பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணியின் போது மாதம் ரூ.20,000/- ஊதியம் அளிக்கப்படும். Lab Technicians பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணியின் போது மாதம் ரூ.12,000/- ஊதியம் அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் நேரடியாக மதிப்பெண் அடிப்படையில் (Marks Based Selection) தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிப்பது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இணையதளத்தில் விண்ணப்பம் பதிவிறக்கி பூர்த்தி செய்து உரிய ஆவணங்களோடு 20.06.2022(நாளைமறுநாள்) மாலை 5 மணிக்குள் தபாலில் Chief Scientific Officer / Director, Research and Development Wing for ISM, Directorate of Indian Medicine and Homoeopathy, Arumbakkam, Chennai -106(Opposite to siddha Mens Hostel) என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் இதுதொடர்பாக தமிழக அரசின் முறையான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய https://www.tnhealth.tn.gov.in/online_notification/notification/N22063552.pdf கிளிக் செய்ய வேண்டும்.












Click it and Unblock the Notifications