ரூ 45 ஆயிரம் முதல் ரூ 70 ஆயிரம் வரை ஊதியம்.. தமிழக அரசில் ஒப்பந்த பணி.. அப்ளை செய்ங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் கைநிறைய சம்பளத்துடன் புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Construction Management Specialist, Environment specialist, community officer and Animator போன்ற பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு மொத்தம் 24 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பங்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.

Tamilnadu Slum Clearance gives opening for some post in contract basis

எனவே தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் வரும் ஜனவரி 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்வோர் ஒப்பந்த அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்கள் மதுரை, சேலம் மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள். www.tnscb.org என்ற இணையதளத்தில் மற்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இதில் Construction Management Specialist பணிக்கும், Environment specialist பணிக்கும் ரூ 70 ஆயிரமும் community officer பணிக்கு ரூ 45 ஆயிரமும் Animator பணிக்கு ரூ 11 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படும்.

இந்த பணிகளுக்கு 12th/ M.Sc/ M.Plan/ M.E./M.Tech/B.E படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். Construction Management Specialist, Environment specialist பணிக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். மற்ற பணிக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து The Superintending Engineer, Salem PIU Circle, Tamilnadu Slum Clearance Board, 3/2, Narayanasamy Street, Peramanur, Salem- 636007 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+