தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் & நடத்துனர் வேலை.. என்னென்ன தகுதி.. முழு விவரம்!

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் (SETC) காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துனர் (driver cum conductor) பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதி அளித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் (SETC) காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துனர் (driver cum conductor) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி காலியாக உள்ள 888 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இந்த பணியிடங்களை நிரப்பவுதற்கான அறிவிப்பு இரண்டு முன்னணி செய்தி தாளில் வெளியிடப்பட வேண்டும் என்றும், விண்ணப்பங்கள் இணைய வழியில் மூலம் மட்டுமே பெறப்பட வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. மேலும், அரசு போக்குவரத்துக் கழகம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து தகுதியான நபர்களின் பட்டியலை பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகத்தின் கீழ், மாநிலம் முழுவதும நீண்ட தூரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (வரை) கோட்த்திற்கு ஒப்புதல் கொடுத்த 203 ஓட்டுநர் காலி பணியிடங்களில் 60% மான 122 ஓட்டுநர்களை மட்டும் பணி்யமர்த்தவும், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் அதே முறையில் ஓப்புதல் தந்த 800 (DCC) பணியிடங்களில் 685 ஓட்டுநர் உடன் நடத்துனர் (DCC) காலி பணியிடங்களை மட்டும் நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. மொத்தம் 203+685 = 888 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஆன்லைன் மூலம் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிகாரப்பூர்வமாக இதுபற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகலாம். நீண்ட வருடங்களாக தமிழ்நாடுஅரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர் மற்றும் நடத்துனர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறாத நிலை இந்த தகவல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

வயது எப்படி

வயது எப்படி

ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ் மொழியில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் (18 மாதங்கள் பூர்த்தியாகியிருத்தல் வேண்டும்), நடத்துனர் உரிமம் (Conductor Licence) இருத்தல் அவசியம் ஆகும், 18 வயது முதல் அதிக பட்சம் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும் என கூறப்படுகிறது.

உயரம் எவ்வளவு

உயரம் எவ்வளவு

St. john Ambulance Association-ஆல் வழங்கப்பட்ட முதலுதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். உயரம் குறைந்த பட்சம் 160 செ.மீ, எடை குறைந்தபட்சம் 50 கிலோ இருத்தல் வேண்டும். கண் திறன் குறைபாடு இருக்கக் கூடாது. சம்பள விகிதம் ரூ.17,500 முதல் ரூ. 56,200 வரை இருக்கும் என தெரிகிறது. மேலாண்மை இயக்குனர் தலைமையிலான தேர்வுக்குழு,வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவர் வேலை

டிரைவர் வேலை

(i) கல்வித் தகுதி, வயது, சாதி சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உரிமம், ஓட்டுநர் தகுதித் திறன், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தகுதித் திறன் ; (ii) வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் ஆகிய இரண்டின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளிதழ்களில் வெளியாகும் என தெரிகிறது. அந்த அறிவிப்பில் முழு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+