மாதசம்பளம் ரூ.25,000 டூ ரூ.1.50 லட்சம்.. தமிழக அரசு நிறுவனத்தில் சூப்பர் வேலை.. அசத்தல் வாய்ப்பு
சென்னை: தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. எக்ஸாம் இல்லாத இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் (Tamil Nadu Fibrenet Corporation Limited or TANFINET) செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தில் கன்சல்டன்ட் (Consultant) மற்றும் ஜூனியர் எக்ஸ்க்யூட்டிவ் (Junior Executive) ஆகிய 2 பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் கன்சல்டன்ட் பணிக்கு 4 பேர், ஜூனியர் எக்ஸ்க்யூட்டிவ் பணிக்கு 5 பேர் என மொத்தம் 9 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் பிஇ, பிடெக், டிப்ளமோ படிப்பை இசிஇ, கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி உள்ளிட்ட பிரிவுகளில் முடித்திருக்க வேண்டும். அதோடு குறைந்தபட்சம் 25 வயதும், அதிகபட்சமாக 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 01.01.2023ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
இது ஒரு தற்காலிக பணியாகும். கன்சல்டன்ட் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.1.125 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரையும், ஜூனியர் எக்ஸ்க்யூட்டிவ் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் ரூ.30 ஆயிரம் வரையும் சம்பளமாக வழங்கப்பட உள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு எதுவுமின்றி விண்ணப்ப ஷார்ட்லிஸ்ட்டுக்கு பிறகு நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட இணைப்பில் சென்று விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்து மே மாதம் 10ம் தேதிக்குள் ஆப்லைன் முறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
அதாவது விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து முறையாக பூர்த்தி செய்து உரிய சான்றுகளோடு The Managing Director, Tamil Nadu FibreNet Corporation Limited, Door.No.807, 5th floor, P.T.Lee Chengalvaraya Naicker Trust, Anna Salai, Chennai - 600 002 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications