தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை.. 500 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. செக் பண்ணுங்க
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை நிறுவனமனான தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் (tangedco) 500 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை தேர்வு முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.
தமிழ்நாடு மின்சார விநியோக கழகம் எனப்படும் tangedco வில் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகிய்யுள்ளது. மொத்தம் 500 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்..

பணியிடங்கள் விவரம்:
1. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் - 395 (பணியிடங்கள்)
2. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் - 22
3. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங் - 09
4. கணினி பொறியியல் / தகவல் தொழில்நுட்பம் - 09
5. சிவில் இன்ஜினியரிங் - 15
6. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் - 50
என மொத்தம் 500 பயிற்சி பணியிடங்கள் (Apprentice Training) நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வி தகுதி என்ன?:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிப்ளமோ இன்ஜினியரிங் அல்லது டெக்னாலாஜி (Full time) அல்லது தொடர்புடைய பிரிவை எடுத்து படித்து இருக்க வேண்டும். 2020 முதல் 2023 பேட்ச்சில் பாஸ் ஆகி இருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்த விவரங்களை தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.
சம்பளம் எவ்வளவு?:
சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ. 8 ஆயிரம் வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பயிற்சி பணி வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறையை பொறுத்தவரை மெரிட் லிஸ்ட் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?:
https://nats.education.gov.in/ என்ற இணையதளம் சென்று அதில் ஸ்டூண்ட் செக்ஷனில் கிளிக் செய்ய வேண்டும். அதில் கேட்கப்படும் விவரங்களை அளித்து லாக் இன் செய்து TANGEDCO என செர்ச் செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பது தொடர்பான முழு விவரங்களும் தேர்வு அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 10.07.2024
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2024
தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் 08.08.2024 வெளியிடப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு 28.08.2024 to 31.08.2024-வரை நடைபெறும். விண்ணப்பதாரகள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக ஒருமுறை நன்கு படித்து அறிந்து கொள்ளவும்.
http://boat-srp.com/wp-content/uploads/2024/07/TANGEDCO_NOTIFICATION_DIPLOMA_APP_SELECTION.pdf
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: https://nats.education.gov.in/.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications