சென்னையில் உள்ள பல்கலை.யில் வேலை! 60 பணியிடங்கள்! ரூ.35 ஆயிரம் சம்பளம்.. சூப்பர் சான்ஸ்! விட்றாதீங்க
சென்னை: சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நான் டீச்சிங் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பத்தாம் வகுப்பு, 12, ஐடிஐ, ஏதாவது ஒரு பட்டம், முதுகலை பட்டம் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சென்னையில் உள்ளது. காஞ்சிபுரம், சிவகங்கை, நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழகத்தில் நிர்வாக ரீதியிலான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 60 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
Subject Matter Specialist (Animal Science) - 04
வேளாண் அறிவியல் - 04
தோட்டக்கலை - 04
சாயில் சயின்ஸ் - 04
ஹோம் சயின்ஸ் / கம்யூனிட்டி சயின்ஸ் - 04
பொருள்சார் நிபுணர் (மீன்வளம்) - 04
திட்ட உதவியாளர் (கணினி) - 04
திட்ட உதவியாளர் (ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்) - 04
ஃபார்ம் மேனேஜர் - 04
உதவியாளர் - 04
சுருக்கெழுத்தர் தரம் - III - 04
ஓட்டுநர் - 08
ஸ்கில்டு சப்போர்ட் ஸ்டாப் - I - 08
என மொத்தம் 60 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
பணியின் தன்மைக்கேற்ப கல்வித் தகுதியானது மாறுபடும். விலங்கு அறிவியல் பணிக்கு துறை சார்ந்த பிரிவில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, 12, ஐடிஐ, ஏதாவது ஒரு பட்டம், முதுகலை பட்டம் ஆகியவை படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் உள்ளன.
டிரைவர் பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியுடன் டிரைவிங் லைசன்ஸ் வைத்து இருக்க வேண்டும். அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு:
18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். அதாவது எஸ்சி/எஸ்டி பிரிவினர் என்றால் 37 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 35 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு?
Subject Matter Specialist - ரூ. 56,100 - 1,77,500/-
திட்ட உதவியாளர் - ரூ. 35,400 - 1,12,400/-
ஃபார்ம் மேனேஜர் - ரூ. 35,400 - 1,12,400/-
உதவியாளர் - ரூ. 35,400 - 1,12,400/-
சுருக்கெழுத்தாளர் - ரூ. 25,500 - 81,100/-
ஓட்டுநர் - ரூ. 21,700 - 69,100/-
ஸ்கில்டு சப்போர்ட் ஸ்டாப் - ரூ. 18,000 - 56,900/-
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு நடைபெறும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை முழுமையாக படித்து உறுதி செய்து கொண்ட பிறகு ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ. 250 கட்டணம் ஆகும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The Director of Extension Education,
Tamil Nadu Veterinary and Animal Sciences University,
Skill Development Centre Building,
Madhavaram Milk Colony,
Chennai, Pincode - 600 051"
விண்ணப்பப் படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்துவிட்டு, கீழ் காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஜனவரி 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://tanuvas.ac.in/pdf/kvk/kvk_notification.pdf
-
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications