டிசிஎஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. கைநிறைய சம்பளம்.. சென்னையிலேயே பணி.. விண்ணப்பம் செய்வது எப்படி?
சென்னை: பிரபல தனியார் நிறுவனமான டிசிஎஸ்ஸில் சென்னை கிளையில் ஏராளாமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதுபற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தியாவில் உள்ள பிரபல தனியார் மென்பொருள் நிறுவனங்களில் ஒன்று டிசிஎஸ் (TCS). டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (Tata Consultancy Service) எனும் இந்த நிறுவனத்துக்கு இந்தியாவில் பல மாநிலங்களில் கிளைகள் உள்ளன.
அதேபோல் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலும் டிசிஎஸ் நிறுவனத்துக்கு கிளை உள்ளது. இந்த கிளையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தான் தற்போது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

பணியின் பெயர் என்ன?
தனியார் நிறுவனமான TCSல் காலியாக உள்ள Big Data Developer எனும் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. காலியிடங்கள் எவ்வளவு என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகாத நிலையில் ஏராளமானவர்களை பணிக்கு அந்த நிறுவனம் தேர்வு செய்ய உள்ளது. மேலும் சம்பளம் பற்றிய அறிவிப்பு வெளியாகாத நிலையில் தகுதி, திறமையின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

கல்வி தகுதி என்ன?
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம், கல்லூரிகளில் என்ஜினியரீங் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதோடு Big Data Developer பணியில் முன்அனுபவம் கொண்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் 6 ஆண்டு வரை விண்ணப்பத்தாரர்கள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் நேர்க்காணல் அல்லது Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணிக்கான விண்ணப்பம் செய்ய விரும்புவர்கள் ஆன்லைன் வழியே விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய நவம்பர் மாதம் 30ம் தேதி கடைசிநாளாகும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வாய்ப்பு
டிசிஎஸ் நிறுவனத்தின் https://ibegin.tcs.com/iBegin/jobs/248723J அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று அதில் உள்ள விபரங்களை படித்து பார்த்த பிறகு விண்ணப்பம் செய்ய Apply என்பதை கிளிக் செய்து விண்ணப்பம் செய்ய முடியும். விண்ணப்பிக்க நவம்பர் மாதம் 30ம் தேதி கடைசி நாள் என்பதால் அதற்கு பிந்தைய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து விண்ணப்பம் செய்ய Click Here
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications