B.com, BA, BBA படித்தோருக்கு சூப்பர் வேலை.. அழைக்கும் டிசிஎஸ்.. அக்டோபர் 12 கடைசி நாள்
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் சார்பில் Arts and Commerce-ல் ஏதாவது ஒரு பாடத்தில் டிகிரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். 2026ம் ஆண்டில் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய அக்டோபர் 12ம் தேதி கடைசி நாளாகும்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS or Tata Consultancy Services). டாடா குழுமத்தை சேர்ந்த இந்த நிறுவனம் நம் நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது டிசிஎஸ் நிறுவனத்தில் TCS BPS Hiring - Batch of 2026 என்ற பெயரில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இந்த பணிக்கு Arts and Commerce பிரிவில் கல்லூரி படிப்பை 2026ல் முடிப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதாவது தற்போது இறுதியாண்டு படித்து வருவோர் விண்ணப்பிக்கலாம். பிகாம், பிஏ, பிஎஎஃப், பிபிஐ, பிபிஏ, பிபிஎம், பிஎம்எஸ் படிப்புகளை முடிப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.3 ஆண்டு முறைப்படி கல்லூரி சென்று படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்யலாம். Part time மற்றும் Distance Education முறையில் படித்தவர்களுக்கு அனுமதியில்லை.
விண்ணப்பம் செய்வோருக்கு ஒரு அரியர் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அதனை பணிக்கு சேருவதற்கு முன்போ அல்லது கல்லூரி படிப்பை முடிக்கும் முன்போ கிளியர் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வோர் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பம் செய்ய அக்டோபர் 12ம் தேதி கடைசி நாளாகும்.
விண்ணப்பதாரர்கள் TCS NextStepPortal சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்யும்போது ஆதார் கார்டில் இருப்பது போல் பெயர் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும். பிழையின்றி சுயவிவரங்களை பதிவிட வேண்டும். பிழை எதுவும் இருப்பின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இதனால் விண்ணப்பதாரர்கள் கவனமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்யும்போது தேர்வு மையத்தை செலக்ட் செய்ய வேண்டும். தேர்வு மையத்தை பொறுத்தவரை First Come First Serve முறை பின்பற்றப்பட உள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்தால் தான் அருகே உள்ள தேர்வு மையத்தை ‛செலக்ட்' செய்யலாம். தேர்வு என்பது மொத்தம் 50 நிமிடங்கள் வரை இருக்கும். Numerical, Reasoning, Quantitative aptitude வகையில் இருக்கும்.
அதோடு விண்ணப்பதாரர்கள் தங்களின் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கல்லூரியில் இதுவரை நடந்த செமஸ்டர் தேர்வுக்கான ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும். மேலும் இந்த பணி தொடர்பான அப்டேட்டுகள் ‛TCS iON - Our Test Provider' மூலம் வழங்கப்படும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோருக்கு தேர்வு தேதி பிறகு அறிவிக்கப்படும்.
மேலும் விண்ணப்பம் மற்றும் பணி நியமனத்துக்கு பணம் எதுவும் கேட்கப்படாது. இதனால் விண்ணப்பத்தாரர்கள் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் [email protected] என்ற இணையதளம் அல்லது 18002093111 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் 24X7 என்ற முறையில் ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications