‛‛பயிற்சி + வேலை’’.. டிகிரி மட்டுமே போதும்! TCS ஐடி நிறுவனம் தரும் நல்ல சான்ஸ்.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: பிரபலமான டிசிஎஸ் நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று டிசிஎஸ் எனும் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (Tata Consultancy Services or TCS). இந்த நிறுவனத்தில் தொடர்ச்சியாக பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

தற்போதைய அறிவிப்பின்படி டிசிஎஸ் நிறுவனத்தில் TCS B.Sc Ignite & Smart Hiring-க்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது. இதில் TCS B.Sc Ignite மற்றும் TCS Smart Hiring ஆகியவற்றுக்கு தனித்தனியே பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இதில் TCS Smart Hiring என்பது முழுக்க முழுக்க IT Role பணியாகும். ஆனால் TCS B.Sc Ignite என்பது TCS Smart Hiring-ல் இருந்து வேறுபட்டதாகும். இந்த 2 பணியை பொறுத்தமட்டில் பிசிஏ, பிஎஸ்சி, B.Voc பிரிவில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
அதாவது பிசிஏ, பிஎஸ்சி என்றால் ஐடி, கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம், டேட்டா சயின்ஸ், ஸ்டேட்டிஸ்டிக்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, எலக்ட்ரானிக்ஸ், சைபர் செக்யூரிட்டி, பயோ கெமிஸ்ட்ரி உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்களும், B.Voc என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதோடு விண்ணப்பம் செய்வோர் இந்த படிப்பை 2023, 2024ல் முடித்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து தேர்வில் தேர்ச்சியடைவோருக்கு டிசிஎஸ் சார்பில் பயிற்சி என்பது வழங்கப்படும். சாப்ட்வேர் என்ஜினியரிங் பணிக்கான பயிற்சிகள் கூட வழங்கப்படும். புதிய தொழில்நுட்பம் மற்றும் முதுகலை பட்டப்படிப்புக்கான வாய்ப்பு வழங்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜுன் மாதம் 24ம் தேதிக்குள்(திங்கட்கிழமை) டிசிஎஸ் நிறுவனத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் தேர்வுக்கு பின் நியமனம் செய்யப்பட உள்ளனர். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். தேர்வு என்பது ஆன்லைனில் நடக்காது. மாறாக தேர்வு மையங்களில் நடத்தப்படும்.
மேலும் இந்த பணியிடங்கள் First Come First Serve முறையில் நிரப்பப்பட உள்ளது. அதாவது ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் குறிப்பிட்ட இடங்கள் மட்டுமே உள்ளன. இதனால் முதலில் விண்ணப்பம் செய்வோருக்கு மட்டுமே அவர்கள் விரும்பும் தேர்வு மையம் கிடைக்கும். தாமதமாக விண்ணப்பம் செய்யும்போது அவர்கள் விரும்பும் தேர்வு மையம் கிடைக்காமல் தூரத்தில் உள்ள தேர்வு மையம் கிடைக்கும் நிலை உருவாகலாம்.
இதனால் விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது சிறந்ததாகும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் [email protected] என்ற இ-மெயில் அல்லது ஹெல்ப்லைன் எண்ணான 18002093111 என்பதை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications