TCS நிறுவனத்தில் சூப்பரான வேலை.. இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க.. ஜுலை 31ம் தேதி கடைசி நாள்
சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு ஜுலை 31ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.
இந்தியாவில் செயல்படும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று டிசிஎஸ் எனும் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (Tata Consultancy Services or TCS). இந்த நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது அசோசியேட் இன்ஜினியர் - அப்ளிகேஷன் மேனேஜ்மென்ட் (Associate Engineer - Application Management) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு BS/MS-ல் கம்ப்யூட்டர் சயின்ஸ் டிகிரி முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் சாப்ட்வேர் இன்ஜினியர் அல்லது இன்ஜினியரிங் படிப்பை ஏதாவது பிரிவில் முடித்திருக்க வேண்டும். AEM Architecture, installation, configuration, வெப் டெக்னாலஜில் ஜாவா, Apache, Http, caching machanisms உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். Shell, Pythone, PowerShell உள்ளிட்டவற்றில் ஸ்கிரிப்டிங் மற்றும் ஆட்டோமேஷனிலும், டேட்டா லாக், Splunk, நியூ ரெலிக், prometheus அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
லினக்ஸ் சர்வர், ஏஇஎம், எஸ்டபிள்யூஎஸ், .நெட் பிரேம்வொர்க் உள்ளிட்டவற்றில் ஓராண்டு பணி அனுபவம் கொண்டிரக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நன்கு படிக்கவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை கற்பதில் ஆர்வம் இருக்க வேண்டும். AWS, AEM சான்றிதழ் பெற்றிருப்பது இன்னும் சிறப்பாகும்.
மேலும் தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும் மாதம் அல்லது ஆண்டு சம்பளம் என்பது வழங்கப்படவில்லை. இந்த பணிக்கு குறைந்தபட்சம் குறிப்பிட்ட துறையில் ஓராண்டு முதல் 6 ஆண்டு வேலை அனுபவம் இருக்க வேண்டும். இதனால் அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜுலை மாதம் 31ம் தேதிக்குள்டிசிஎஸ் நிறுவனத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைதரபாத் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பின் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications