TCS நிறுவனத்தில் சென்னை உள்பட 3 இடங்களில் வேலை.. யாருக்கெல்லாம் வாய்ப்பு? மிஸ் பண்ணாதீங்க
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் சார்பில் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை உள்பட 3 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்று TCS எனும் Tata Consultancy Services. இந்த நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு: டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது டெவலப்பர் (Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு குறிப்பிட்ட அந்த பிரிவில் குறைந்தபட்சம் 2 முதல் 5 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு C#, .NET தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் C# பயன்படுது்தி டிசைன் , டெவலப், ஹை பெர்மாமன்ஸ் சாப்ட்வேர் அப்ளிகேஷன் உருவாக்க தெரிந்திருக்க வேண்டும்.
.NET அப்ளிகேஷனின் டெஸ்ட் மற்றும் டீபக் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் Agile மற்றும் Scrum Team-ல் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். SQL/PLSQL பயன்படுத்தி டேட்டாபேஸ் சைட் டெவலப்மென்ட் பணி மற்றும் Angular-ல் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். நல்ல கம்யூனிகேஷன் திறமை கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அறிவிப்பில் மாத சம்பளம் பற்றி எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படலாம். சம்பளம் பற்றி இறுதிக்கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கு விண்ணப்பம் செய்ய கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, ஹைதராபாத், நொய்டா உள்ளிட்ட 3 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications