TCS வேலைவாய்ப்பு.. பிஇ, பிடெக், பிஎஸ்சி, பிசிஏ உள்பட டிகிரி முடித்தவர்களே ரெடியா? சென்னையில் பணி
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு பிடெக், பிஇ, எம்டெக்,எம்சிஏ, எம்எஸ்சி, எம்எஸ், பிசிஏ, பிஎஸ்சி உள்பட ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று TCS எனும் Tata Consultancy Services. இந்த நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
இந்த அறிவிப்பின்படி டிசிஎஸ் நிறுவனத்தில் Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிஇ, பிடெக், எம்டெக், எம்சிஏ, எம்எஸ்சி, எம்எஸ்சி, பிசிஏ, பிஎஸ்சி உள்பட ஏதேனும்ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மேலும் விண்ணப்பம் செய்வோருக்கு மேலும் சில தகுதிகள் இருக்க வேண்டும்.
அதன்படி பார்த்தால் Sprigboot 2, Java 8, JEE, RESTful Web Serices தெரிந்திருப்பதோடு 6 ஆண்டு முதல் 10 ஆண்டுக்குள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால் building Modular Code பிரிவில் 6+, Springboot-ல் 4+ ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதோடு Springboot பயன்படுத்தி மீடியம் முதல் லார்ஜ் ஸ்கேல் வகையில் 2 புராஜெக்ட்டில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இதுதவிர டெலிகாம், இகாமர்ஸ் மற்றும் செல்ஃப்கேர் டொமைன் அறிவு, Kafka, Cassandra, Cosmos DB, Cloud (AWS, Azure) தெரிந்திருக்க வேண்டும். அதோடு நல்ல கம்யூனிகேஷன் திறமை கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் மாத சம்பளம் பற்றி எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படலாம். சம்பளம் பற்றி இறுதிக்கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படப்படவில்லை. இதனால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது. பணிக்கு தேர்வாகும்ந பர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications