TCS ஐடி நிறுவனத்தில் வேலை.. நாளை இண்டர்வியூ.. சென்னை உள்பட பல இடங்களில் வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் நிறுவனத்தில் Frontend Developer பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு நாளை (அக்டோபர்) இண்டர்வியூ நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை உள்பட பல இடங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

தமிழகத்தில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் முக்கிய நிறுவனங்களில் ஒன்று TCS எனும் Tata Consultancy Services. இந்த நிறுவனம் சார்பில் தற்போது புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

it jobs job

டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது Frontend Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் தொடர்புடைய துறையில் 4 முதல் 6 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Frontend Developer என்ற முறையில் ReactJS-ல் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அதேபோல் HTML, CSS , JS, ReactJS, Node உள்ளிட்டவற்றில் திறமை கொண்டவர்களாக இருக்க வேண்டும். அதேபோல் Core Front - end technologies உள்ளிட்டவற்றில் நல்ல புரிதல் இருக்க வேண்டும்.

நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். அதேபோல் டிசைனிங் டூல்ஸ்களான Figma, Adobe உள்ளிட்டவற்றில் திறன் பெற்றிருக்க வேண்டும். Git தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவின்போது அதுபற்றிய விபரம் தெரிவிக்கப்படலாம்.

இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது நாளை (அக்டோபர் 24) நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் இந்தியா முழுவதும் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர். இதனால் வாய்ப்பு இருப்பின் சென்னையில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்திலும் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கலாம்.

இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசிஎஸ்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் விண்ணப்ப தேதி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம்.

பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+