Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

TCS வேலைவாய்ப்பு.. சென்னை உள்பட 6 இடங்களில் பணி நியமனம்.. நல்ல சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்பட 6 இடங்களில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

TCS எனும் Tata Consultancy Services ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது டிசிஎஸ் நிறுவனத்தில் Ping Identity Developer பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

it jobs job

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, புனே, டெல்லி உள்ளிட்ட 6 இடங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அக்சஸ் மேனேஜ்மென்ட் கான்செப்ட்களான SSO, Federation, MFA, SAML, OAuth, OIDC, WSFED, LDAP மற்றும் Reverse Proxy உள்ளிட்டவற்றை பற்றி நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் Ping Federation, Ping Access, Ping Directory பற்றிய புரிதல் இருக்க வேண்டும். பிங்க் பெடரேட்டில் ஆன்போர்டிங் அப்ளிகேஷனில் SAML, OAuth/OIDC புரோட்டோகால் மற்றும் REST APIS, XML/JSON உள்ளிட்டவற்றில் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

அதேபோல் ப்ரோகிராமிங் லேங்குவேஜ் ஜாவா தெரிந்திருக்க வேண்டும். Linux Based Infrastructure மற்றும் Ping Federate/Ping Access installation and Configuration மற்றும் அக்சஸ் மேனேஜர் டூல் ஏதேனும் ஒன்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

தற்போது வெளியாகி உள்ள இந்த பணிக்கு வழங்கப்படும் சம்பளம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் பற்றி அனுபவம் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படலாம். சம்பளம் பற்றி இறுதிக்கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்படலாம்.

இந்த பணிக்கான அறிவிப்பு வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்டது. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் பணிக்கான விண்ணப்ப தேதி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+