டிகிரி போதும்.. நல்லா பேசுவீங்களா? TCS அலுவலகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு.. சென்னையிலேயே பணி
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் நிறுவனத்தில் Process Associate பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
டாடா குழுமத்தை சேர்ந்த ஐடி நிறுவனம் தான் TCS எனும் Tata Consultancy Services. இந்த நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம் என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது Process Associate (Banking Specialist) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். முதுகலை பிரிவில் டிகிரி முடித்தவர்கள், எம்பிஏ, பிஇ, பிடெக் படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம்.
மேலும் விண்ணப்பம் செய்வோர் தங்களுக்கான கல்வி சான்றிதழ்கள் அனைத்தையும் வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி 1 முதல் 2 ஆண்டுகள் வரை ஜெனரிக் பேங்கிங் ஆபரேஷன்ஸில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நன்றாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல் Comprehension மற்றும் அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். இதுதவிர விண்ணப்பம் செய்வோர் ரோட்டேஷனல் ஷிப்ட்டில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். தேர்வாகும் நபர்கள் 0 - 30 நாட்களுக்குள் பணியில் சேர தயாராக இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவின்போது அதுபற்றிய விபரம் என்பது தெரிவிக்கப்படலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்.
இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசிஎஸ்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது என்பதை கவனத்தில் வைக்க வேண்டியது அவசியமாகும்.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications