TCS வேலைவாய்ப்பு.. சென்னை உள்பட 2 இடங்களில் பணி நியமனம்.. ரெடியா?
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை உள்பட 2 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று TCS எனும் Tata Consultancy Services. இந்த நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக தற்போது வெளியாகி உள்ள புதிய வேலைவாய்ப்பு பற்றிய முக்கிய தகவல்கள் வருமாறு: டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது React JS Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு React JS, Typescript, JavaScript, HTML, CSS உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் Bootstrap அல்லது அதுபோன்ற பிரேம்வொர்க்ஸ் பயன்படுத்தி டெவலப்பிங் பணியில் அனுபவம் இருக்க வேண்டும். அதேபோல் Redux, Redux saga அல்லது Redux Thunk, Middleware அல்லது useQuery hook உள்ளிட்டவற்றில் நல்ல திறன் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் Module Bundler- Webpack தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல் கோட் வெர்சனிங் டூல்ஸ் git/bitbucket, யூனிட் டெஸ்ட்டிங் பிரேம்வொர்க்ஸான Karma/JEST தெரிந்திருக்க வேண்டும். மேலும் RESTful APIs தெரிந்திருப்பதோடு டேட்டா ப்ளோவுக்கான ஃப்ரண்ட்எண்ட் மற்றும் பேக்எண்ட்தெரிந்திருக்க வேண்டும். நல்ல கம்யூனிகேஷன் மற்றும் அனலிசிஸ் திறமை இருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக React JS Developer பணியில் 4 முதல் 9 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவின்போது அதுபற்றிய விபரம் என்பது தெரிவிக்கப்படலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்.
இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசிஎஸ்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது என்பதை கவனத்தில் வைக்க வேண்டியது அவசியமாகும்.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications