TCS வேலைவாய்ப்பு.. சென்னை உள்பட 4 இடங்களில் பணி நியமனம்.. விண்ணப்பிக்க ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல ஐடி நிறுவனமான டிசிஎஸ்-ல் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, ஹைதராபாத், கொச்சி, புனே உள்ளிட்ட இடங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இந்தியாவில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டிசிஎஸ் செயல்பட்டு வருகிறது. டிசிஎஸ் (TCS) என அழைக்கப்படும் Tata Consultancy Services சார்பில் அடுத்தடுத்து பல்வேறு காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

it jobs jobs job

அந்த வகையில் தற்போது தான் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

தற்போதைய அறிவிப்பின்படி டிசிஎஸ் நிறுவனத்தில் ஜாவா ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் (Java Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஜாவா (Java), ஸ்பிரிங் புட்(Spring), ரெஸ்ட்ஃபுல் வெப் சர்வீசஸ் (Restful Web Services), மைக்ரோசர்வீசஸ் (Microservices), ஸ்பிரிங் புட் (Spring Foot) உள்ளிட்டவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இதுதவிர டிசைனிங், பில்டிங், ரெஸ்ட்ஃபுல் ஏபிஐஎஸ் பற்றிய அறிவு பெற்றிருக்க வேண்டும். JUNIT டெஸ்ட் கேசஸ் ரைட்டிங்கில் அனுபவம் கொண்டிருக்க வேண்டம். சிஐ/சிடி உள்ளிட்டவற்றிலும், வெப் சர்வீசஸ், ஸ்பிரிங் ஃப்ரேம்வொர்க்க உள்ளிட்டவற்றை பற்றிய நல்ல புரிதல் இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி Jira/agile tools, SVN அல்லது Git உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் மேற்கூறிய பணிகளில் குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும் மாதம் அல்லது ஆண்டு சம்பளம் என்பது வழங்கப்படவில்லை. தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் டிசிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, ஹைதராபாத், கொச்சி, புனே உள்ளிட்ட 4 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+