TCS ஐடி வேலைவாய்ப்பு.. சென்னை உள்பட 2 இடங்களில் பணி.. ஆன்லைனில் இண்டர்வியூ
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, நொய்டாவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான இண்டர்வியூ ஆன்லைனில் நடைபெற உள்ளது.
நம் நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டிசிஎஸ் உள்ளது. டாடா குழுமத்தை சேர்ந்த இந்த நிறுவனத்துக்கு சென்னை உள்பட நம் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன.

இப்போது பலருக்கும் ஐடி வேலை ஒரு கனவாக உள்ள நிலையில் தான் டிசிஎஸ் சார்பில் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்கள் வருமாறு:
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது Azure Data Engineer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிஇ, பிடெக், எம்சிஏ, எம்எஸ்சி, எம்எஸ் படிப்பை முடித்து தொடர்புடைய பிரிவில் படிப்பை முடித்துவிட்டு ஐடி பிரிவில் 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் விண்ணப்பம் செய்வோர் சம்பந்தப்பட்ட பிரிவில் 8 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்களுக்கு பைத்தான், Azure Data Engineer Cerfication வைத்திருந்தால் அது பிளஸ் பாயிண்ட்டாகும்.
தற்போதைய அறிவிப்பில் சம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம, திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் 2 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி உத்தர பிரதேச மாநிலம் நொய்டா மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான இண்டர்வியூ விரைவில் நடைபெற உள்ளது. இண்டர்வியூ ஆன்லைனில் நடைபெற உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம். அதன்பிறகு இண்டர்வியூவுக்கான தேதி, நேரம் உள்ளிட்டவை தெரிவிக்கப்படும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications