2 பிரிவுகளில் காலியிடங்கள்.. சென்னையில் செப்டம்பர் 13ல் இண்டர்வியூ.. டிசிஎஸ் தரும் சூப்பர் சான்ஸ்
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் 2 பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்து செப்டம்பர் 13ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டிசிஎஸ் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சென்னையில் உள்ள அலுவலகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது Cloud Engineer மற்றும் Salesforce Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான தகுதிகள் என்னென்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

கிளவுட் இன்ஜினியர்
மேலும் கிளவுட் இன்ஜினியர் (Cloud Engineer) பிரிவில் உள்ள காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு குறைந்தபட்சம் 6 ஆண்டு முதல் அதிகபட்சம் 10 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி Azure Data Factory ஸ்கில்ஸ் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
சேல்ஸ்ஃபோர்ஸ் டெவலப்பர்
அதேபோல் சேல்ஸ்ஃபோர்ஸ் டெவலப்பர் (Salesforce Developer) பணிக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு குறைந்தபட்சம் 6 ஆண்டு முதல் அதிகபட்சம் 10 ஆண்டு வரை பணி அனுபவம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பணி நியமனம்
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து பிரத்யேகமாக எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த 2 பணிகளுக்கும் தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இண்டர்வியூ எப்போது?
இந்த 2 பணிகளுக்கான இண்டர்வியூ செப்டம்பர் 13ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்க் மூலமாக விண்ணப்பம் செய்யலாம். இவ்வாறு விண்ணப்பம் செய்வோருக்கு இண்டர்வியூவுக்கான முகவரி மற்றும் நேரம் உள்ளிட்டவை டிசிஎஸ் நிறுவனம் சார்பில் அனுப்பி வைக்கப்படும்.
Cloud Engineer பணிக்கு விண்ணப்பம் செய்ய Click Here
Salesforce Developer பணிக்கு விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications