TCS ஐடி நிறுவனத்தில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு.. ஜனவரி 17 ல் இண்டர்வியூ.. பெங்களூரில் பணி நியமனம்
பெங்களூர்: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு ஜனவரி 17 ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது CORE - Net Full Stack + (React JS/Angular JS) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட .ள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10, பிளஸ் 2 முடித்து ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதன்படி Mandatory Skills விவரம் வருமாறு:
* விண்ணப்பம் செய்வோருக்கு Saas Solutions தெரிந்திருக்க வேண்டும்.
* மைக்ரோசாப்ட் டெக்னாலஜி வெப் டேக்கில் C#, .NET Core-ரில் பணியாற்றி இருக்க வேண்டும்.
* Angular, React உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றில் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும்.
* Typescript பயன்படு்தி வெப்அப்ளிகேஷன் டெவலப்மென்ட் பணியை சிறப்பாக செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
* டேட்டாபேஸ் டெவலப்மென்ட்டில் MS SQL/SQL Azure, EF 6, EF Core உள்ளிட்டவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
* Azure Toolset-ல் பேசிக்கான KeyVault, Azure Storatge, queues, Blob உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
* Unit Testing-கில் Nunit, Moq, Jest தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் டேட்டாபேசில் MongoDB தெரிந்திருக்க வேண்டும்.
* கன்ட்ரோல் சிஸ்டம் பயன்படுத்துவதில் Git/SVN தெரிந்திருக்க வேண்டும்.
* கோலாபோரேஷன் டூல்ஸில் Azure Devops Asana, Jira தெரிந்திருக்க வேண்டும்.
* கிளவுட் அடிப்படையில் அப்ளிகேஷன் டெவலப்மென்ட்டில் Ms Aure, AWS, Google Cloud உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
* Power BI Azure Analysis Service Tableeau, Anaplan உள்ளிட்டவை தெரிந்திருந்தால் அது பிளஸ் பாயிண்ட்டாகும்.
* டெக்னிக்கல் ஸ்கில்ஸை பொறுத்தவரை Neo 4J, வெப் டிசைன் அனுபவம், எச்டிஎம்எல் 5, சிஎஸ்எஸ், எஸ்சிஎஸ்எஸ் பற்றிய புரிதல், JSON and Rest API இன்டேகிரேஷன் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். மேலும் MS Power BI யூசஜ் மற்றும் இன்டிகேரஷன் தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் தற்போதைய அறிவிப்பில் பணிக்கான மாதசம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். பிற நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள் என்றால் கையில் Relieving கடிதம் அல்லது அனுபவம் தொடர்பான கடிதம் வைத்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ ஜனவரி 17 ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன்பிறகு Tata Consultancy Services Limited, Bengaluru - Brigade BhuwalkaIcon, ITPL Main Road, Whitefield, Bengaluru - 560 066 என்ற முகவரிக்கு சென்று இண்டர்வியூவில் பங்கேற்க வேண்டும்.
இண்டர்வியூவுக்கு செல்வோர் கையில் Resume, அரசு சார்பில் வழங்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, டிசிஎஸ் அப்ளிகேஷன் பார்ம் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும். தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: நாளை முதல் 2 நாள் இண்டர்வியூ.. சென்னை HCL நிறுவனத்தில் வேலை ரெடி.. சூப்பர் சான்ஸ் -
வேலையில்லாத இளைஞர்கள் அதிரடி கைது.. இரவோடு இரவாக வீடு புகுந்து தூக்கிய போலீஸ்.. என்ன காரணம்? -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications