TCS ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. சென்னை - பெங்களூரில் பணி நியமனம்.. மார்ச் 15ம் தேதி இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டிசிஎஸ்ஸில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மார்ச் 15ம் தேதி இண்டர்வியூ நடைபெற உள்ளது. இதில் தேர்வாகும் நபர்கள் சென்னை மற்றும் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

டாடா குழுமத்தை சேர்ந்த ஐடி நிறுவனமாக டிசிஎஸ் செயல்பட்டு வருகிறது. நம் நாட்டில் உள்ள பிரபலமான ஐடி நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஐடி நிறுவனத்தில் தற்போது புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

it jobs jobs job

அதன்படி டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது CyberArk பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான இண்டர்வியூவில் பங்கேற்போருக்கான தகுதிகள் பற்றிய விபரம் வருமாறு:

CyberArk பணிக்கான இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் குறிப்பிட்ட பிரிவில் 3 ஆண்டுகளுக்கு மேலான பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் CyberArk 9.Xல் டிசைன், இம்ப்ளிமென்டேஷன் தெரிந்திருக்க வேண்டும். EPV, PVWA, Central Policy Manager(CPM), Privileged Session Manager (PSM), Application Identity Manager (AIM) தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் டேட்டா பேஸ், விண்டோஸ், யூனிஸ் சர்வர்ஸில் எண்ட்பாயிண்ட்ஆன் போர்டிங் மற்றும் ஆஃப் போர்டிங் புராசஸ் தெரிந்திருக்க வேண்டும்.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான மாதசம்பளம் என்ன என்பது பற்றி இப்போதைய அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசிகட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு சற்று மாறுபட வாய்ப்புள்ளது.

மேலும் பணிக்கு தேர்வாகும் நபர்கள் 2 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி சென்னை மற்றும் பெங்களூரில் அவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது மார்ச் 15ம் தேதி சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.

இந்த இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் உங்களின் ரெஸ்யூமை [email protected] என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதோடு கடந்த ஒரு மாதத்தில் டிசிஎஸ் நிறுவனத்தில் ஏதேனும் இண்டர்வியூ அட்டன்ட் செய்திருந்தால் இதில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+