பிஏ + பிஎஸ்சி + பிகாம்.. ஏதாவது டிகிரி போதும்.. TCS தரும் சூப்பர் சான்ஸ்.. மே 12ல் இண்டர்வியூ
பெங்களூர்: முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிகாம், பிஎஸ்சி பிசிஏ, பிஏ படிப்பை முடித்தவர்கள் மே 12ம் தேதி நடைபெறும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இந்த பணிக்கான தகுதி மற்றும் இண்டர்வியூ எங்கு நடக்கிறது? என்பது பற்றிய முழு விபரம் வருமாறு:
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டிசிஎஸ் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு நம் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் சென்னையில் டிசிஎஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதேபோல் கர்நாடகாவில் பெங்களூரில் டிசிஎஸ் அலுவலகம் உள்ளது.

இந்நிலையில் தான் டிசிஎஸ் சார்பில் தற்போது Business Process Services பிரிவில் டே்டா புராசஸிங் (Data Processing) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணியை விரும்புவோர் குறைந்தபட்சம் ஏதாவது ஒரு டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். அதாவது பிகாம், பிஏஎப், பிபிஐ, பிபிஏ, பிசிஏ, பிபிஎம், பிஎம்எஸ், பிஏ படிப்புகளை முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பிஎஸ்சி படிப்பை எடுத்து கொண்டால் அக்ரிகல்சர் மற்றும் ஹார்ட்டிகல்சர் படித்தவர்களை தவிர மற்றவர்கள் இண்டர்வியூ செல்லலாம். இருப்பினும் அவர்கள் அனைவரும் கல்லூரி படிப்பை 2023 மற்றும் 2024ம் ஆண்டில் முடித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு 0-6 மாதம் முன்அனுபவம் கொண்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதன்படி டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்களும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். அதேபோல் எந்த ஷிப்ட்டாக இருந்தாலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். பெங்களூரில் டிசிஎஸ் அலுவலகத்தின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் பணி செய்ய தயாராக இருக்க வேண்டும். இண்டர்வியூவில் பங்கேற்போருக்கு Aptitude Test மற்றும் இண்டர்வியூ என்பது இருக்கும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது மே மாதம் 12ம் தேதி பெங்களூரில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை இண்டர்வியூ நடைபெறும்.
இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் KLE Society's, S.Nijalingappa College, #1040, Rajaji nagar, Bengaluru 560010 என்ற முகவரிக்கு குறித்த நேரத்தில் செல்ல வேண்டும். இண்டர்வியூவில் செல்வோர் Resume, அரசு வழங்கிய ஏதாவது ஒரு அடையாள அட்டை ஒரிஜினல், கல்வி சான்றுகளை கையில் வைத்திருக்க வேண்டும்.
மேலும் TCS Nextstep Portal-ல் சென்று BPS கேட்டகிரியை தேர்வு செய்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
IT Jobs: பெங்களூர் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஜூன் 15ல் ஆன்லைனில் இண்டர்வியூ -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications