பெங்களூரில் ஐடி வேலை ரெடி.. ஆகஸ்ட் 1ல் நடக்கும் இண்டர்வியூ.. அழைக்கும் டிசிஎஸ்
பெங்களூர்: பெங்களூரில் இயங்கி வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்று பயன் பெறலாம்.
டாடா குழுமத்தை சேர்ந்த ஐடி நிறுவனமாக டாடா கன்சல்டன்சி டெக்னாலஜி உள்ளது. சுருக்கமாக டிசிஎஸ் என அழைக்கப்படும் இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

அதன்படி தற்போது டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து GCP DevOps Engineer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி சிஜிபி-யிலில் சிஐ/சிடி பைப்லைன்ஸில் கிளவுட் - நேட்டிவ் அப்ளிகேஷன், டிசைன், இம்பிளிமெண்ட், மேனேஜ்மென்ட் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
Terraform உள்ளிட்டவற்றை பயன்படுத்தி ஆட்டோமேட் இன்ஃப்ராஸ்ட்ரெக்சர் புரோவிஷனிங் தெரிந்திருக்க வேண்டும். கம்ப்யூட் இன்ஜினன், ஜிகேஇ, கிளவுட் ஸ்ட்டோரேஜ், கிளவுட் பில்ட், கிளவுட் மானிட்டரிங் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். Docker மற்றும் Kubernetes உள்ளிட்டவற்றை பயன்படுத்தி ஆர்க்கெஸ்ட்ரேஷன் சொல்யூஷன்ஸ் மற்றுமு் கண்டெய்னரிசேஷன் தெரிந்திருக்க வேண்டும்.
ட்ரபிள்சூட் பிரச்சனைகள் இம்பிளிமென்ட் ப்ரோஅக்டிவ் சொல்யூஷன்ஸ் தெரிந்திருக்க வேண்டும் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமை அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இதற்கான இண்டர்வியூ ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி பெங்களூரில் நடைபெற உள்ளது.
அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது. இண்டர்வியூ Face to Face முறையில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யும் பட்சத்தில் இண்டர்வியூ நடக்கும் முகவரி, நேரம் உள்ளிட்டவை தெரிவிக்கப்படும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here


Click it and Unblock the Notifications
