ஐடி துறையில் வேலை வேண்டுமா? TCS வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. சென்னையில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: டிசிஎஸ் நிறுவனத்தில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேர்வாகும் நபர்கள் சென்னை, ஹைதராபாத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது Guidewire Policy Center Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிஇ, பிடெக், எம்சிஏ, எம்எஸ்சி, எம்எஸ் படிப்பை படித்து சம்பந்தப்பட்ட பிரிவில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்பம் செய்வோர் கண்டிப்பாக கல்லூரியில் ஃபுல்டைம் படிப்பை படித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தாரர்களுக்கு Guidewire Configurations for policy Center, GOSU Programming தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் ஜாவா/ஜே2இஇ, எக்ஸ்எம்எல் தெரிந்திருக்க வேண்டும். ஜாவா ஸ்கிரிப்ட், ஸ்பிரிங் ஃபிரேம்வொர்க் உள்ளிட்டவையும் தெரிந்திருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் பற்றிய விவரம் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் 2 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஒன்று சென்னை. இன்னொன்று ஹைதராபாத் என 2 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இதற்கான இண்டர்வியூ Virtual (MS Teams) முறையில் நடைபெறும். விண்ணப்பம் செய்வோருக்கு இண்டர்வியூ தேதி பற்றிய விவரம் அனுப்பி வைக்கப்படும். கடைசி ஒரு மாதத்தில் டிசிஎஸ் நிறுவனத்தில் இண்டர்வியூவில் பங்கேற்றவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications