TCS-ல் இருந்து வந்த புதிய அறிவிப்பு.. ஆகஸ்ட் 10ம் தேதி இண்டர்வியூ.. சென்னையிலேயே பணி!
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜாவா ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் பணிக்கு ஆகஸ்ட் 10ம் தேதி இன்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS or Tata Consultancy Services) எனும் டிசிஎஸ் சென்னையில் செயல்பட்டு வருகிறது. சென்னை சோழிங்கநல்லூரில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தற்போதைய அறிவிப்பின்படி டிசிஎஸ் நிறுவனத்தில் ஜாவா ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் (Java Full Stack Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 12ம் வகுப்பை தொடர்ந்து குறைந்தபட்சம் 3 ஆண்டு கல்லூரி படிப்பில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு சில டெக்னிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.
அதன்படி ஜாவா ஸ்பிரிங் புட்(Java Spring Boot), மைக்ரோசர்வீசஸ் (Microservices), ஸ்பிரிங் ப்ரேம் (Spring Frame) உள்ளிட்டவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் மேற்கூறிய பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 5 முதல் அதிகபட்சமாக 9 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது வரும் 10ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. அதாவது டிசிஎஸ் சோழிங்கநல்லூர், சென்னை குமரன் நகர், 415/21 -24 டிஎன்எச்பி மெயின் ரோடு சென்னை என்ற முகவரியில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் வைத்து நடைபெற உள்ளது. இண்டர்வியூவின்போது தேவையான அனைத்து ஆவணங்களையும் எடுத்து செல்ல வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும் மாதம் அல்லது ஆண்டு சம்பளம் என்பது வழங்கப்படவில்லை. தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் டிசிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications