TCS நிறுவனத்தில் சூப்பர் வேலை.. சென்னை - பெங்களூர் - ஹைதராபாத் உள்பட 8 இடங்களில் நியமனம்
சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்பட 9 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜாவா ஃபுல்ஸ்டாக் டெவலப்பர் (Java Full Stack Developer - React or Angular) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு பிஇ/பிடெக், எம்சிஏ, எம்எஸ்சி/எஸ்எஸ் படிப்பை முடித்து சம ஐடி துறையில் குறைந்தபட்சம் 4 ஆண்டு பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். கல்லூரி படிப்பை முழு நேர படிப்பாக படித்திருக்க வேண்டும்.
அதேபோல் விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும் அதன்படி ஜாவா, ஸ்பிரிங்புட், ஏதாவது கிளவுட்டில் நிபுணத்துவம் றெப்றிருக்க வேண்டும். MySQL/SQL Server உள்ளிட்டவற்றில் நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும். அதேபோல் OOPS, RDBMS-யில் ஸ்ட்ராங் அறிவை பெற்றிருக்க வேண்டும். Angular அல்லது React JS தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் LINQ, Entity Framework, Json, XML, JQuery,Kafka, Rdis Cache உள்ளிட்டவை தெரிந்திருக்கவேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் அதிகபட்சமாக 9 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பில் இந்த பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் கூறப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து பயன் பெறலாம்.
இப்படி விண்ணப்பம் செய்வோர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கான நேரம், இடம் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் 9 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி சென்னை பெங்களூர், ஹைதராபாத் கொல்கத்தா, புனே, நொய்டா, குர்கிராம், இந்தூர் உள்ளிட்ட இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications