சென்னையிலேயே பணி.. ஜனவரி 3ல் இண்டர்வியூ.. டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ 2026 ஜனவரி 3ம் தேதி நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது ஜாவா ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் (Java Full Stack Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை பெற விரும்புவோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும்.

அதன்படி சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் அதிகபட்சமாக 12 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக ஜாவா/ஜே2இஇ, ஆங்குலர் உள்ளிட்டவற்றில் 5 ஆண்டுகளுக்கு மேலாக அனுவம் கொண்டிருக்க வேண்டும்.
ஃபுல் ஸ்டாக் கிளவுட் நேட்டிவ் டெவலப்மென்ட், ரெஸ்ட்புல் ஏபிஐ, கிராப் பேஸ்ட் ஏபிஐ மற்றும் ஸ்பிரிங்புட்டுடன் கூடிய சர்வர்லெஸ் மைக்ரோசர்வீசஸ் உள்ளிட்டவை பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோல் DevOPSயை எடுத்து கொண்டால் Git, Jenkins, Ansible தெரிந்திருக்க வேண்டும்.
ஃப்ரண்ட் என்ட் டெவலப்மென்ட் தெரிந்திருக்க வேண்டும். பேக்எண்ட் கம்யூனிகேஷனில் அனுபவம் இருக்க வேண்டும். அதேபோல் ActiveMQ அல்லது Kafka பற்றி தெரிந்திருக்க வேண்டும். மேலும் JBOSS மற்றும் Websphere, மைக்ரோசர்வீசஸ், ஏடபிள்யூஎஸ் சர்வீசஸ் உள்ளிட்டவை பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மிஸ் செய்யாமல் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
இதற்கான இண்டர்வியூ சென்னையில் 2026 ஜனவரி 3ம் தேதி நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் Tata Consultancy Services Ltd, SIPCOT IT Park Navalur, Siruseri, Chennai - 603103 என்ற முகவரிக்கு ஜனவரி 3ம் தேதி செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications