ஆகஸ்ட் 1ம் தேதி இண்டர்வியூ.. சென்னை உள்பட 2 இடங்களில் வேலை ரெடி.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் சென்னை மற்றும் நொய்டாவில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் Kronos Professional பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி Kronos Clock Terminals மற்றும் ட்ரபிள்சூட்டிங்கில் அனுபவம் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். டெக்னிக்கல் பிரச்சனைகளை தீர்க்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் Kronos Dimensions -யில் 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இதுதவிர Kornos-யில் டைம் கிப்பிங், செட்யூலிங், அக்ரூலஸ், அட்டென்டென்ஸ், ஆக்டிவிட்டிஸ் மற்றும் அட்டெஸ்டேஷன் உள்ளிட்டவை தெரிந்திருந்தால் பிளஸ் பாயிண்ட்டாகும். Dell Boomi Integration பிளாட்பார்மில் யுகேஜி சர்ட்டிபிகேட் மற்றும் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 12 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
இதற்கான இண்டர்வியூ ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை 2 இடங்களில் இண்டர்வியூ நடைபெற உள்ளது. சென்னை என்றால் TCS Chennai, F1A Area, 415/21-24, Old Mahabalipuram Road, Kumaran Nagar, Sholinganallur, Chennai, Tamil Nadu 600 119 என்ற முகவரியில் இண்டர்வியூ நடைபெற உள்ளது.
நொய்டா என்றால் TCS, Yamuna Tower 1st Floor, VI, Plot o.22, Noida Greater Noida Expressway, Sector 135, Noida 201 301 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. இண்டர்வியூ Face to Face முறையில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here


Click it and Unblock the Notifications
