நாளை ஆன்லைனில் இண்டர்வியூ.. அழைக்கும் டிசிஎஸ் ஐடி நிறுவனம்.. இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ நாளை ஆன்லைனில் நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
டாடா குழுமத்தின் ஒரு பகுதியாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னை உள்பட பல முக்கிய நகரங்களில் இதன் கிளைகள் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் நெட்வொர்க் டேட்டா (Network Data) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை விரும்புவோருக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும்.

அதன்படி பிளஸ் 2 முடித்த பிறகு ஏதாவது ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 15 ஆண்டு கல்வியை ஃபுல் டைம் முறையில் கற்றிருக்க வேண்டும். அதன்பிறகு ரூட்டிங் (Routing) உள்பட ஐபி நெட்வொர்க்கிங் பற்றி நன்கு தெரிந்திருக்க வண்டும். Palo Alto firewalls ல் பணி அனுபவம் கொண்டிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
புதிய தொழில்நுட்பங்களை விரைவாக கற்கும் திறன் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் டீமாக சேர்ந்து பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். குறிப்பாக ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 9 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
இதற்கான இண்டர்வியூ நாளை நடைபெற உள்ளது. இது Online Drive ஆகும். நாளை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம். இண்டர்வியூ குறித்த பிற விபரங்கள் செல்போன் அல்லது இ-மெயிலில் அனுப்பி வைக்கப்படும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
IT Jobs: பெங்களூர் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஜூன் 15ல் ஆன்லைனில் இண்டர்வியூ -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications