TCS ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. நாளை நடக்கும் இண்டர்வியூ.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் சார்பில் Process Specialist பிரிவில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான இண்டர்வியூ நாளை (மே 25) நடைபெற உள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தில் அடுத்தடுத்து காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முழு விபரம் வருமாறு:

டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது Process Specialist பிரிவுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் Process Associate/Senior Process Associate ஆக நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த பணியை விரும்புவோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் P & C Personal lines insurance மற்றும் Annuity Products Viz Retirements, Pensions உள்ளிட்டவற்றில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம். பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். டிசிஎஸ் சார்பில் இண்டர்வியூ மற்றும் பணியை வழங்குவதற்கு எந்த கட்டணமும் வசூலிப்பது இல்லை. யாராவது கட்டணம் செலுத்தும்படி கேட்டால் கொடுக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை (மே 25) காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் Tacta Consultancy services Ltd, S3, Tikona Building A1 Ragad, Sahyadri Prak, Plot No 2&3 Phase 3, Rajiv Gandhi Infotec Park, Maan, Hinjewadi, Pune - 411 057 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
இண்டர்வியூவுக்கு செல்லும் நபர்கள் ஒரிஜில் ஐடி ப்ரூப் (பான் கார்டு/ஆதார் கார்டு) வைத்திருக்க வேண்டும். கல்வி மற்றும் பணி அனுபவம் தொடர்பான சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும். ரெஸ்யூம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இண்டர்வியூ.. அனுபவம் வேண்டாம்.. அழைக்கும் HCL -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications