ஆன்லைனில் இன்று இண்டர்வியூ.. TCS-யில் பைத்தான் டெவலப்பராக ரெடியா? சென்னை உள்பட 6 இடங்களில் பணி
சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து பைத்தான் டெவலப்பர் (Python Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான இண்டர்வியூ இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆன்லைனில் வீடியோ கால் வழியாக நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து ஆன்லைன் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்பட 6 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து தற்போது பைத்தான் (Python Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சீனியர் பைத்தான் டெவலப்பராக நியமனம் செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதன்படி ஒவ்வொருவருக்கும் டிஜிட்டலில் பைத்தான் இ2, எஸ்க்யூஎல்லில் இ2 தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல் எஸ்க்யூஎல்லில் டேட்டாபேஸ் டிசைன் மற்றும் ஆப்டிமைசேஷனில் Querying மற்றும் Manipulation data அனுபவம் இருக்க வேண்டும். பைத்தான் புரோகிராமிங் லேங்குவேஜில் நல்ல அனுபவம் இருக்க வேண்டும். Github, github Actions உள்ளிட்டவற்றில் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும்.
மேலும் ஏடபிள்யூஎஸ் டெக் ஸ்டாக்கில் Lambda, Step Functions, Glue, S3, Kafka, Kiesis, RDS, EC2 உள்பட பலவற்றில் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும். ஏடபிள்யூஎஸ் சிடிகே மற்றும் Terrform உள்ளிட்டவை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக பைத்தான் டெவலப்பராக குறைந்தபட்சம் 5 ஆண்டு மதல் 10 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் அல்லது ஆண்டு சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இண்டர்வியூ என்பது இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆன்லைனில் நடைபெற உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். இப்படி விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைககப்படுவார்கள். பணிக்கு தேர்வாகும் நபர்கள் 6 இடங்களில் நியமனம் செய்யப்பட .ள்ளனர். அதன்படி தமிழ்நாட்டில் சென்னை, தெலுங்கானாவில் ஹைதராபாத், கர்நாடகாவின் பெங்களூர், மகாராஷ்டிராவின் புனே, மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா மற்றும் டெல்லி உள்ளிட்ட இடங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: நாளை முதல் 2 நாள் இண்டர்வியூ.. சென்னை HCL நிறுவனத்தில் வேலை ரெடி.. சூப்பர் சான்ஸ் -
வேலையில்லாத இளைஞர்கள் அதிரடி கைது.. இரவோடு இரவாக வீடு புகுந்து தூக்கிய போலீஸ்.. என்ன காரணம்? -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு!












Click it and Unblock the Notifications