TCS ஐடி நிறுவனம் தரும் சூப்பர் வாய்ப்பு.. பிப்ரவரி 15ம் தேதி இண்டர்வியூ.. சென்னையிலேயே பணி
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது பிப்ரவரி 15ம் தேதி நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
நம் நாட்டில் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டிசிஎஸ் உள்ளது. டாடா குழுமத்தை சேர்ந்த இந்த நிறுவனம் நம் நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இயங்கி வருகிறது.

இதற்கிடையே தான் சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன் விபரம் வருமாறு:
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து தற்போது Salesforce Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் 12 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக Salesforce Ligtning Web Component Developer பணியில் 6 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அதேபோல் Salesforce.com Project lifecyle பற்றிய நல்ல புரிதலை கொண்டிருக்க வேண்டும். ரிவியூயிங் மற்றும் டாக்குமென்டிங் Code அனுபவம் இருக்க வேண்டும். Soucre Control பற்றிய அறிவை பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி லைட்னிங் வெப் காம்போனென்ட் தெரிந்திருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது பிப்ரவரி 15ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் சென்னை டிசிஎஸ் அலுவலகத்துக்கு அன்றைய தினம் செல்ல வேண்டும். கல்வி சான்று, பணி அனுபவம் உள்ளிட்ட சான்றுகள், போட்டோ, ரெஸ்யூம் உள்பட இண்டர்வியூவுக்கு தேவையான ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications